பாகிஸ்தானுடன் பைனல்.. நாங்க இருக்கோம்..அடிச்சி ஆடுங்க.. இங்கிலாந்துக்கு ‛‛மெசெஜ்’’ கூறிய ரிஷி சுனக்
லண்டன்: உலககோப்பை டி20 போட்டி பைனலில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து அணியை வாழ்த்தி ‛மெசேஜ்' ஒன்றை கூறி உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.
தகுதி சுற்று, சூப்பர் 12 சுற்றுகள் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேற்றின. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் கால் பதித்தன.

உலககோப்பை டி20 பைனல்
இதில் முதலாவது நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா குவித்த 168 ரன்களை விக்கெட் இழப்பின்று இங்கிலாந்து அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

பாகிஸ்தான் பேட்டிங்
உலககோப்பை டி20 புதிய சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங்கை துவங்கி உள்ளது.

2வது முறை சாம்பியன் யார்?
இந்த இறுதிபோட்டியில் மோதும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனே உலககோப்பை டி20 கோப்பையை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி 2009ல் கோப்பையை வென்ற நிலையில் இங்கிலாந்து அணி 2010ல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக உலககோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வெல்லும். தற்போதைய சூழலில் மேற்கிந்திய தீவுகள் அணி மட்டுமே 2 முறை(2012, 2016) உலககோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக் வாழ்த்து
இந்நிலையில் தான் பிரிட்டன் பிரதமாராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛டி20 உலககோப்பை கிரிக்கெட் பைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும். பிரிட்டனில் உள்ள ரசிகர்களுடன் சேர்ந்து நானும் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். அனைத்து வகையிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications