பிரிட்டன் Ex பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு அமைச்சராக நியமனம்.. ரிஷி சுனக் அதிரடி.. ஏன் முக்கியம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடி அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. குறிப்பாக முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் உள்துறை அமைச்சராக இருந்தவர் சுயல்லா பிரேவர்மேன். இவர் சமீபத்தில் பாலஸ்தீன போராட்டம் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.

நீக்கம்: இதற்கிடையே அதிகரிக்கும் அழுத்தத்தைச் சமாளிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதன்படி பிரிட்டன் உள் துறை அமைச்சராக இருந்த சுயல்லா பிரேவர்மேன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் க்ளெவர்லி என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் க்ளெவர்லி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நிலையில், அவர் இப்போது உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டேவிட் கேமரூன்: ஜேம்ஸ் க்ளெவர்லி உள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், பிரிட்டன் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான டேவிட் கேமரூன் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 57 வயதான பிரிட்டன் அரசியலில் முக்கியமானவர். அவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பிரிட்டன் பிரதமராக இருந்தார். இவர் பிரதமராக இருந்த போதுதான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது. அதற்கு மறுநாளே டேவிட் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த சமயத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. கடந்த 2014இல் இவர் பிரதமராக இருந்த போது தான், பிரிட்டனில் தன்பாலின திருமணத்திற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போது கேமரூன் பேசுகையில், "நான் பழமைவாதியாக இருந்தாலும் தன்பாலின திருமணத்தை ஆதரிக்கிறேன் எனச் சொல்வது தவறு.. நான் ஒரு பழமைவாதி என்பதாலேயே தன்பாலின திருமணத்தை ஆதரிக்கிறேன் என்பதே சரி" என்று கூறியிருந்தார்.
முக்கிய முடிவுகள்: மேலும், டேவிட் கேமரூன் காலத்தில் தான் லிபியாவில் ராணுவத் தலையீட்டிற்கும் அவர் உத்தரவிட்டார். மேலும், கடந்த 2014இல் ஸ்காட்லாந்தின் சுதந்திரம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் கேமரூன் ஒப்புக்கொண்டார். மேலும், முன்பே சொன்னது போல இவரது காலத்தில் தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறியது. இப்படி கேமரூன் பிரதமராக இருந்த போதுதான், பிரிட்டனில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய டேவிட் கேமரூன் அதன் பிறகு அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இந்தச் சூழலில் தான் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் கேமரூன் மீண்டும் நேரடியாக அரசு பொறுப்பிற்கு வந்துள்ளார். அவர் இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
ஏன் முக்கியம்: பிரிட்டன் நாட்டில் அடுத்தாண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே ரிஷி சுனக்கின் கன்ச்வேடிவ் கட்சி மீது மக்களிடையே மிகப் பெரிய அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியைச் சமாளிக்க ரிஷி சுனக் பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டேவிட் கேமரூன் வருகை அவருக்கு பலம் சேர்ப்பதாகவே அமைகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications