டக்கென கட்டிப்பிடித்து.. முத்தம் தந்த அமைச்சர்.. ஆபீஸிலேயே நடந்த கூத்து.. மிரண்டு போன மக்கள்!
பிரிட்டன் சுகாதார செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
லண்டன்: ஆபீஸில் தன்னுடைய செக்ரெட்டரியை, டக்கென கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டார் ஒரு அமைச்சர்.. இதுதான் வீடியோவாக வெளிவந்து பிரிட்டனை கிறுகிறுக்க வைத்து வருகிறது.
Recommended Video
இந்த 2 வருடமாகவே தொற்று அதிகமாக பரவி வருகிறது.. இதில் பெருமளவு பாதிக்கப்படுவது மேலை நாடுகள்தான்..
காரணம், இவர்களுக்கு நம்மை போல வணக்கம் சொல்லும் பழக்கம் இல்லை.. யாராக இருந்தாலும் பார்த்த மாத்திரத்தில் கை கொடுத்து, கட்டிப்பிடித்துதான் மரியாதை செலுத்துவார்கள்..

ஊழியர்
மேலும் அன்பானவர்களுக்கு முத்தம் தருவதும் இயல்பான ஒன்று.. எனவே, தொற்றுநோயை கட்டுப்படுத்த பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன... இப்படிப்பட்ட அபாயகரமான நேரத்தில், ஒருத்தர் தொற்றை மறந்து, கொரோனா விதிகளை மறந்து, ஒரு பெண்ணை டக்கென கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டார்..

முத்தம்
இப்படி முத்தம் தந்தவர் சாதாரண நபர் இல்லை.. பிரிட்டன் நாட்டு சுகாதார அமைச்சர் ஆவார்.. முத்தம் தந்தது தன்னுடைய செக்ரெட்டரிக்கு.. இந்த அமைச்சர் பெயர் மாட் ஹான்காக்.. தன்னுடைய ஆபீஸிலேயே, தன்னிடம் வேலை பார்க்கும் சக பெண்ணுடன் நெருக்கமாகி முத்தமும் தந்துள்ளார்.. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது.. இது வீடியோவாகவும் வெளிவந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..!

ஜான்சன்
ஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா?.. இவரை பார்த்து வேறு யாராவது இப்படி செய்தால் என்னாகும்? என்று மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.. இப்படி காரியம் செய்ததுக்கு பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கடைசியில் தன்னுடைய செயலுக்கு சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்..

ராஜினாமா
இதையடுத்து மாட் ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சனும் அறிவித்தார்.. ஆனாலும், வெறும் மன்னிப்பு போகாது, சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் பதவி விலகியே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்தன.. இதையடுத்து, வேறு வழியில்லாமல், அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications