இங்கிலாந்து சென்றார் முதல்வர் ஸ்டாலின்.. “தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்”.. நெகிழ்ச்சி!
லண்டன்: ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்" என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை விமானத்தில் சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் செயலர்கள், அமைச்சர் டிஆர்பி ராஜா, பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். அன்று இரவு 9 மணியளவில் ஜெர்மனி சென்றடைந்தார் ஸ்டாலின். அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெர்மனியில் ஸ்டாலின்
அதைத்தொடர்ந்து, ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜெர்மனியில் ஸ்டாலின் தலைமையில் 'டி என் ரைசிங் யுரோப்' முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'டி என் ரைசிங் ஜெர்மனி' முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்தில் 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஜெர்மனியில் மொத்தம் 26 ஒப்பந்தங்களின் மூலம் ரூ.7,020 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல முன்னணி நிறுவனங்கள் விரிவாக்கப் பணிகளுக்கான முதலீட்டுக்கு முன்வந்துள்ளன.
முதலீட்டு ஒப்பந்தங்கள்
இந்த மாநாட்டில் வென்சிஸ் எனர்ஜி (ரூ.1,068 கோடி), பிஏஎஸ்எஃப் (ரூ.300 கோடி), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி), ஹெர் ரென்க்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி), பல்ஸ் (ரூ.200 கோடி), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி) மற்றும் மாஷ் எனர்ஜி (ரூ.200 கோடி ) ஆகிய முக்கிய நிறுவனங்கள் முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
பிஎம்டபிள்யு நிறுவனத்தின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பின்போது, ஆட்டோ மொடிவ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கை எடுத்துரைத்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் செயல்பாட்டை தமிழகத்தில் அதிகப்படுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
வேலைவாய்ப்பு
ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழகம் கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ் பில்டங்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 120 மாணவர்களுடன் தொடங்கும் இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் 20,000 மாணவர்களாக உயரும். தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பல முதலீட்டாளர்கள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்களை சந்தித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், "ஜெர்மனி வருகையின் போது தமிழகத்திற்கு மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனால் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜெர்மனி முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழகத்தை தேர்ந்து எடுத்து உள்ளனர்." எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து சென்றடைந்தார் ஸ்டாலின்
இந்த நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் முதலமைச்சரை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதல்வர் ஸ்டாலினுடன் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன், கடல் கடந்த இந்த பயணத்தில் வீட்டின் நறுமணத்தை பெற்றேன். உற்சாக வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்தேன்" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications