காமன்வெல்த் தொடக்க விழா.. பிவி.சிந்து, மன்ப்ரீத் தலைமையில் அணிவகுத்த இந்திய அணி.. தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் பங்கேற்ற பி.வி.சிந்து, மன்ப்ரீத் சிங் ஆகியோர், தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

Commonwealth Games Indian team led by PV Sindhu, Manpreet Singh

இங்கிலாந்தில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழா அணிவகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். அதன்படி, தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா, மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர் மிக அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்திய வீரர், வீராங்கனைகள் முன்பை விட அதிக பதக்கங்களை இந்த தொடரில் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+