தீவிரம் அடைந்த கொரோனா.. உடல்நிலை மோசமானது.. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சனில் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.

Recommended Video

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதி..உடல்நிலை மோசமானது..

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் 26ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். பிரதமர் மாளிகையில் சுகாதாரத்துறை ஆலோசகர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா ஏற்பட்டது.

    அதே சமயம் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை மூலம் சார்ல்ஸ் குணப்படுத்தப்பட்டார்.

    போரிஸ் ஜான்சன் உடல்நிலை

    போரிஸ் ஜான்சன் உடல்நிலை

    முதலில் போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் மெல்லிய கொரோனா அறிகுறிகள் மட்டுமே இருந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 10 நாட்கள், தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மருத்துவமனை சென்றார்

    மருத்துவமனை சென்றார்

    நேற்று அவருக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா அறிகுறிகள் கொஞ்சம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக நேற்று அதிகாலை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தார்கள். அவரின் பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடல்நிலை மோசம்

    உடல்நிலை மோசம்

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சனில் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அவருக்கு மூச்சு விடுவதில் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களுக்கு முன்தான் இங்கிலாந்தில் தேர்தலை சந்தித்து இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். அதேபோல் சில வாரங்கள் முன்தான் கர்ப்பமாக இருக்கும் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.தற்போது கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு 55 வயது ஆகிறது. இவரின் உடல் நிலை குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் நலம் விசாரித்து வருகிறார்கள் .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+