Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாமாஸ் விலங்குகள்.. கொரோனாவை கண்டதும் வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஆண்டிபாடி.. நம்பிக்கை தரும் ஆராய்ச்சி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: தென் அமெரிக்காவில் இருக்கும் லாமாஸ் வகை ஒட்டகங்களில் இருக்கும் ஆண்டிபாடிகள் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொண்டு இருப்பதாகவும், இந்த ஆண்டிபாடிகள் கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாகவும் மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மருந்து தொடங்கி பல்வேறு மருந்து சோதனைகளை பல்வேறு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் விலங்குகளில் எதிலாவது கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்றும் கூட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை தென் அமெரிக்காவில் இருக்கும் லாமாஸ் விலங்குகள் ஈர்த்து இருக்கிறது. லாமாஸ் என்பது வெள்ளை ஆடு போல இருக்கும் ஒரு வகையான ஒட்டக குடும்பத்தை சேர்ந்த விலங்கு ஆகும்.

என்ன விலங்கு

என்ன விலங்கு

இந்த லாமாஸ் விலங்கு உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் எதிர்ப்பு சக்தி மூலம் எச்ஐவி, இன்புளுயென்சா ஆகிய நோய்களை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். லாமாஸ் விலங்குகளில் இருக்கும் ஆண்டிபாடிகள் மனிதர்களை தாக்கும் பல்வேறு நோய்களை குணப்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

கொரோனா ஆராய்ச்சி

கொரோனா ஆராய்ச்சி

இந்த நிலையில்தான் தற்போது இந்த லாமாஸ் விலங்கில் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு மருந்து, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்று சோதனை செய்து வருகிறார்கள். யுகேவில் இருக்கும் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ஆராய்ச்சி (Rosalind Franklin Institute) மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் நைஸ்மித் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து உள்ளது. இந்த ஆராய்ச்சியில்தான் வியக்க வைக்கும் முடிவுகள் வெளியானதாக கூறுகிறார்கள்.

சொன்னது என்ன

சொன்னது என்ன

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தெரிவிக்கவில்லை, லாமாஸ் விலங்குகள் மிகவும் அதிக ஆண்டிபாடிகளை கொண்டது. இதில் இருக்கும் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆண்டிபாடிகள் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். இதற்கு உள்ளே இருக்கும் சிறு சிறு ஆண்டிபாடி அமைப்புகளை நேனோபாடி என்று அழைப்பார்கள். இந்த நேனோபாடிகளை கொஞ்சம் லேசாக மாற்றி அதை மனிதர்களுக்கு செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை வழங்கலாம், என்று கூறியுள்ளார்.

கண்டுபிடித்தது எப்படி

கண்டுபிடித்தது எப்படி

இந்த லமாஸ் விலங்குகளின் உடலில் இருக்கும் நேனோபாடிகளை எடுத்து அதை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மற்றும் மற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தோம். பெட்ரி டிஷஸ் (petri dishes) எனப்படும் உயிருள்ள மனித செல்களில் வைத்து சோதனை செய்தோம். பொதுவாக வைரஸ் ஆராய்ச்சி, செல்கள் ஆராய்ச்சிகளை செய்ய இந்த பெட்ரி டிஷஸ் முறை பயன்படுத்தப்படும். ஒரு சிறிய வளையமான தட்டில் மனித செல்களை வைத்து சோதனை செய்வதுதான் இந்த முறை. இந்த ஆராய்ச்சி மூலம்தான் லமாஸ் விலங்கின் நேனோபாடிகளுக்கு கொரோனாவை எதிர்க்கும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எதிர்ப்பு திறன்

எதிர்ப்பு திறன்

இந்த பெட்ரி டிஷ்ஸஸ்களில் கொரோனா வைரசை செலுத்தினோம். அது கொரோனா பாதிப்புக்கு உள்ளானது. அதே சமயம் இந்த பெட்ரி டிஷ்களில் லமாஸ் விலங்கின் நேனோபாடிகளை புகுத்தி அதன்பின் அதில் கொரோனாவை செலுத்தினோம். அப்போது அந்த செல்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக்கவில்லை. அதாவது லமாஸ் விலங்கின் நேனோபாடி இருக்கும் செல்கள் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாக்கவில்லை.சிறிய அளவில் இந்த நேனோபாடி இருந்தால் கூட கொரோனா அதை தாக்கவில்லை.

 கண்டதும் அழிக்கிறது

கண்டதும் அழிக்கிறது

சரியாக சொல்லவேண்டும் என்றால் கொரோனா வைரஸ் உடலுக்குள் வருவதற்குள், அந்த வைரஸை கண்டுபிடித்து இந்த நேனோபாடி அதை அழிக்கிறது. இதுவரை நடந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதை தடுப்பூசி போல பயன்படுத்த முடியாது. ஆனால் இதை " passive immunization" மருந்து போல பயன்படுத்தலாம் என்கிறார்கள். அதாவது கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்துவது. passive immunization என்பது மனிதர்கள் இடையே பல வருடமாக செய்யப்படும் ஒரு நோய் தடுப்பு முறையாகும்.

என்ன முறை இது

என்ன முறை இது

ஒரு நோய் தாக்கி அதில் இருந்து மீண்டும் வரும் நபர்களுக்கு அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி இருக்கும். இந்த எதிர்ப்பு சக்தியை எடுத்து வேறு ஒரு நபரின் உடலில் செலுத்துவதுதான் "passive immunization'' ஆகும். இதைத்தான் தற்போது லமாஸ் விலங்கு மூலம் செய்ய இருக்கிறார்கள். அதாவது லமாஸ் விலங்கில் இருக்கும் எதிர்ப்பு சக்தி நேனோபாடிகளை எடுத்து, அதை மனிதர்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி பின் நமது உடலில் செலுத்தி எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.

எப்படி செலுத்துவார்கள்

எப்படி செலுத்துவார்கள்

இதை ஒரு சிறிய டியூப் மூலம் மூக்கில் செலுத்தும் மருந்து போல உருவாக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது நாசிக்குள் அடிக்கும் ஸ்பிரே போல இந்த நேனோபாடிகளை உருவாக்கி அதை மூக்கு வழியாக உடலில் செலுத்த முடியும் என்று கூறுகிறார்கள். இந்த நேனோபாடிகளுக்கு எதிராக மனித உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி எப்படி செயல்படும் என்று தற்போது இறுதிக்கட்ட ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள்.

Recommended Video

    Corona vaccine : தேதியை அறிவித்த Russian scientists
    வெற்றி

    வெற்றி

    ஆனால் கண்டிப்பாக லாமாஸ் நேனோபாடி கொரோனா தடுப்பு சோதனையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தும். இந்த நேனோபாடிகள் கொரோனாவிற்கு எதிராக அதிக திறன் கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக கொரோனா ஆராய்ச்சியில் இது புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இந்த லாமாஸ் விலங்கு தொடர்பாகவும் , நேனோபாடி தொடர்பாகவும் கூடுதல் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+