எலிசபெத் ராணி மறைவுக்கு வருத்தமா? இதோ உங்களுக்கான ஆஃபர்.. கொகைன் டீலர்களின் குறுஞ்செய்தி
லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் உலகம் முழுவதும் உள்ள ஒரு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அந்த வகையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் போதைப் பொருள் விற்பவர்களையும் இந்த மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன் காரணமாக தாங்கள் விற்கும் போதைப் பொருட்களுக்கு தள்ளுபடி தருவதாக பல போதை பொருள் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுகு்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
மன்னராட்சியின் தொடர்ச்சியின் மீது பற்று கொண்டிருந்தவர்கள் மட்டுமே எலிசபெத்தின் மறைவுக்கு வருத்தப்பட்டிருந்தார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது போதைப் பொருள் விற்பனையாளர்களும் அரசியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைவுக்கு இரங்கல்
பிரிட்டனின் நீண்ட நாள் அரசியான எலிசபெத் வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உலக தலைவர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், போதைப் பொருள் விற்பனையாளர்களும் பிரிட்டன் அரசி மறைவுக்கு இரங்கல் தெரித்துள்ளனர். இவர்கள் தெரிவித்த இரங்கல் தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, அரசியின் மறைவையொட்டி தாங்கள் விற்கும் போதைப் பொருட்களுக்கு விலை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

குறுஞ்செய்திகள்
இது தொடர்பாக டிவிட்டரில் ஸ்கிரீன் ஷாட்கள் பரவலாக காணக்கிடைக்கின்றன. அரசி இறந்து 13 நிமிடங்கள் கழித்து வழக்கமான ஒரு வாடிக்கையாளருக்கு மெயில் ஒன்று வந்திருக்கிறது. அதில், ஒரு அவுன்ஸ் கஞ்சா போதை பொருளுக்கான விலைப்பட்டியல் இணைக்கப்பட்டு அதில் அரசி மறைவையொட்டி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கெட்டமைன் எனும் போதைப்பொருளின் விலையும் இந்த மெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

வருத்தப்படுகிறீர்களா?
அதேபோல ராணியின் மறைக்கு பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாடிக்கையாளர் ஒருவருக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது. அதில், "ராணியின் மரணம் குறித்த சோகமான செய்தியால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம், நான் அதிகாலை 1 மணி வரை இருக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு வாடிக்கையாளருக்கு மிகவும் விலையுயர்ந்த பொலிவியன் ஃப்ளேக் எனப்படும் போதைப்பொருள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலையில் தள்ளுபடி
இந்த வகையான போதைப் பொருள் பொதுவாக இந்தியா மதிப்பில் ரூ.10,000லிருந்து விற்கப்படும். ஆனால் ராணியின் மறைவையொட்டி இங்கிலாந்தில் இது தற்போது 9,600க்கு விற்கப்படுவதாக போதைப்பொருள் விநியோகர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான போதை பொருள் விற்பனையாளர்கள் மறைந்த ராணிக்கு தொடர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் "இந்த தேசிய துக்கத்தின் போது, நாங்கள் முழு சேவையை நடத்தி வருகிறோம்" என்று வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளில் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தள்ளுபடி திடீரென முளைத்துவிடவில்லை. மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிசபெத்தின் 'பிளாட்டினம் ஜூபிலி' கொண்டாட்டத்தின்போதும் இதுபோன்ற அறிவிப்புகளை போதைப் பொருள் விற்பனையாளர்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications