கோடிகளை அசால்ட்டாக அள்ளிய அதிர்ஷ்டசாலி.. லாட்டரியில் விழுந்த ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் துள்ளிய தெரு
லண்டன்: அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் தெரியாது. அதிலும் லாட்டரியில் அடிக்கடி அதிர்ஷ்டமானது, எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை.. இப்படிப்பட்ட லாட்டரி அதிர்ஷ்டத்தில் அதிசயமும் சேர்ந்துவிட்டால்??? அப்படியொரு அதிசயம்தான் மறுபடியும் நடந்துள்ளது.
லாட்டரியில் முதல் பரிசு கோடி ரூபாய்கள் விழுவதை கேள்விப்பட்டுள்ளோம்.. ஆனால், அதிசயங்களும் இதே லாட்டரியில் நடந்து அவ்வப்போது பொதுமக்களை திணறடித்து விடுகிறது.

தந்தை கடை: நம்முடைய இந்தியாவில்கூட இப்படி சம்பவங்கள் நடந்ததுண்டு.. சமீபத்தில் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே நெட்டோசேரி பகுதியில், 64 வயதாகும் என்.ஜே.அகஸ்டின் என்பவர், லாட்டரி சீட்டு கடை ஒன்றை 10 வருட காலமாகவே நடத்தி வருகிறார்.
இந்த 10 வருடத்தில் ஒருமுறை கூட அவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததில்லை.. இதனால் மற்றவர்கள்தான் குலுக்கல் பரிசுகளில் பலனடைந்துள்ளனர்.. சம்பவத்தன்றும் குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு, அகஸ்டினின் மகள் ஆஷ்லி என்ற 24 வயது பெண்ணுக்கு விழுந்தது.. முதல் பரிசு ரூ.75 லட்சமாகும்.. அதாவது, அப்பாவின் லாட்டரி கடையில் வாங்கிய சீட்டுக்கு, மகளுக்கு முதல் பரிசு கிடைத்தது பலருக்கும் வியப்பை தந்திருந்தது.
அமெரிக்கா: இப்படித்தான், அமெரிக்காவில் ஒருவர் 18 வருடங்களுக்கு முன்பு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்.. அதில், 300 டாலர் பரிசாக கிடைத்திருக்கிறது. பிறகு, மீண்டும் 18 வருடம் கழித்து, ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்.. அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்தபோது, அவருக்கு முதல் பரிசு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், 18 வருடங்களுக்கு முன் பரிசு விழுந்த அதே நம்பர்தான், இப்போது வாங்கிய லாட்டரி சீட்டிலும் இருந்திருக்கிறது.
லண்டன் சுவாரஸ்யம்: இந்நிலையில், இங்கிலாந்து லாட்டரி சீட்டிலும் ஒரு சுவாரஸ்யம் இன்று நடந்துள்ளது.. இங்கிலாந்தின் டார்செட் (Dorset) என்ற இடத்தை சேர்ந்தவர் ஏமி.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் லாட்டரியில் மிகவும் பிரியம் உடையவர். அதனால், சமீபத்தில் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்.
இந்த லாட்டரிக்கு பரிசு விழுந்திருப்பதாக எமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், எப்படியும் தனக்கு 10,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துவிடும் என்று நினைத்து, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் ஏமி.
பரிசுத்தொகை: ஆனால், பரிசுத்தொகையை பெற்றுக் கொள்ள சென்றால், அவருக்கு 250,000 பவுண்டுகள் பரிசு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகை தனக்கு கிடைக்கும் என்று ஏமி எதிர்பார்க்கவேயில்லை. இதனால், உச்சக்கட்ட ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார் ஏமி.
பிறகு திடீரென மேலும் 2 பேருக்கு 250,000 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏமி குழம்பி போனார்.. பிறகுதான் தெரிந்தது, பிரையன், கிறிஸ் என்ற தம்பதிகளும் இதே லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கும் அதே பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது.
ஆச்சரியம்: ஒரே தொகை 3 பேருக்கும் கிடைத்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அந்த தம்பதி இருவருமே, ஏமி வசிக்கும் அதே தெருவை சேர்ந்தவர்களாம். கணவன், மனைவி இருவருமே தனித்தனியாக லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். இருவருக்குமே லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.
மிகக்குறைவான தொகை கிடைக்கும் என்று நினைத்து சென்றால், எதிர்பார்க்காத அளவுக்கு லட்சக்கணக்கான பவுண்டுகள் கிடைத்ததால், 3 பேருமே திக்குமுக்காடி போய்விட்டனர்.. ஒரே தெருவில் வசிக்கும் 3 பேருக்கு பரிசு கிடைத்துள்ளது லண்டனில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications