"ஐ லவ் பக்கோடா.." பெண் குழந்தைக்கு "பக்கோடா" என பெயரிட்ட பிரிட்டன் தம்பதி! தீயாக பரவும் செய்தி
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த தம்பதி தங்கள் மகளுக்குப் பக்கோடா என்ற இந்திய ஸ்நாக்கின் பெயரை வைத்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
பல கலாச்சாரங்கள், பல உணவு முறைகளைக் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் உணவுகள் அனைவரும் விரும்பக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.
இப்போது தான் வெளிநாட்டில் இருந்து பல இந்தியாவுக்கு வரும் நிலையில், நமது நாட்டின் பழக்க வழக்கங்கள் உலகம் முழுவதும் மிக ஈஸியாக சென்று சேர்கிறது.

இந்தியா
குறிப்பாக இந்தியாவின் உணவுகள் இப்போது தான் உலக அளவில் சென்று சேர தொடங்கி உள்ளது. சமீபத்தில் கூட செஸ் ஒலிம்பியாட்டிற்கு சென்னை வந்திருந்த வெளிநாட்டு வீரர்கள் இந்திய உணவு முறைகளை ஒரு பிடி பிடித்து இருந்தனர். இட்லி, தோசை போன்ற உணவுகளை அவர்கள் விரும்பி சாப்பிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி செய்த செயல் இணையத்தில் வைரலானது.

பிரிட்டன் தம்பதி
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைக்கு இந்தியாவின் பிரபலமாக உள்ள ஸ்நாக்ஸான பக்கோடாவின் பெயரை வைத்து உள்ளனர். அங்குள்ள நியூடவுன்பெர்ரி என்ற இடத்தில் உள்ள கேப்டன்ஸ் டேபிள் என்ற உணவகம் தனது பேஸ்புக் பக்கத்தில், தங்கள் உணவகத்தில் கிடைக்கும் பக்கோடா ரொம்பவே பிடித்துப் போனதால், தம்பதி ஒருவர் தங்கள் குழந்தைக்குப் பக்கோடா எனப் பெயரிட்டதாகப் பதிவிட்டது.

பக்கோடா
"பக்கோடாவை உலகிற்கு வரவேற்கிறோம்" என்றும் அந்த குழந்தையின் படத்தைப் பதிவிட்டு இருந்தது. அந்த படம் உடனடியாக இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இணையத்தில் பலரும் குழந்தையின் பெயர் குறித்துக் கிண்டல் அடித்தனர். எனக்கும் தான் சிக்கன் டிக்கா பிடிக்கும் அதற்காக எனது குழந்தைக்கு அந்த பெயரை வைக்க முடியுமா என்ற ரீதியில் பலரும் கேள்வி எழுப்பினர். குழந்தைக்குப் பக்கோடா எனப் பெயர் வைத்தது உடனடியாக இணையத்தில் டிரெண்டிங் ஆனது.

விளக்கம்
இந்தச் சூழலில் கேப்டன் டேபிள் உணவக உரிமையாளர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது தங்களின் முந்தைய பதிவு உண்மை இல்லை என்றும் விளையாட்டாகவே அதைப் பதிவிட்டதாகவும் தெரிவித்தார். நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவதால் பலரும் துன்பத்தை எதிர்கொண்டு வருவதாகவும் இதனால் ஜாலியாக இருக்கட்டுமே என்று இப்படிப் பதிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜோக்
மேலும், அந்தப் படத்தில் இருக்கும் குழந்தை உண்மையில் தங்கள் பேரக்குழந்தை என்றும் அவளுக்கு கிரேஸ் எனப் பெயரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். "இந்த உலகத்திலேயே எனக்கு சிக்கன் பக்கோடாவும் எனது பேத்தியும் தான் ரொம்பவே பிடிக்கும். இதனால் தான் இரண்டையும் சேர்த்து ஒரு ஜேக்கிற்றாக இந்தப் போஸ்ட்டை பதிவிட்டேன்" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications