கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி பார்ப்போம்.. இப்டி ஒரு 'மங்கி' நம்ம வீட்ல இருந்தா ஜாலிதான்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: நாய் ஒன்று சிறுமியுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி பார்ப்போம்.. இப்டி ஒரு மங்கி நம்ம வீட்ல இருந்தா ஜாலிதான்!

    மனிதனின் உற்ற தோழனாக இருப்பதில் நாய்களை எந்த விலங்காலும் மிஞ்ச முடியாது. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது வெளிநாட்டு நாய் ஒன்று.

    Dog plays hide and seek with a small girl

    இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியுள்ள ஒரு வீடியோவில், சிறுமியுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடி அசரவைக்கிறது மங்கி எனும் பெயர் கொண்ட அந்த நாய். நாய் உயரமே இருக்கும் அந்த குட்டி பாப்பா, மங்கியிடம் கண்ணாமூச்சி விளையாடலாமா என கேட்கிறார்.

    அதை ஆமோதித்து தலையாட்டும் அந்த நாய், சிறுமி சிக்னல் கொடுத்தவுடன் சுவரில் முகம் பதித்து கண்களை மூடிக்கொண்டு கேட்சராக மாறுகிறது. அந்த கேப்பில் சிறுமி ஒளிந்துகொள்கிறார். சில விநாடிகளுக்கு பிறகு "ஓகே என்னை கண்டுபிடிக்கலாம்", என சிறுமி குரல் கொடுத்ததும் டக்கென பாய்ந்து வீட்டுக்குள் ஓடுகிறது மங்கி நாய்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மெய்சிலிர்த்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த நாய் உண்மையில் கண்ணாமூச்சி விளையாடுகிறதா என வியந்துபோய் பாராட்டி உள்ளனர்.

    கொரோனா ஊரடங்கால் வெளியே சென்று விளையாட முடியாமல் குழந்தைகள் தவித்து வருகிறார்கள். எல்லோருடைய வீட்டிலும் மங்கி போல் புத்திசாலியான நாய்கள் இருந்தால் குழந்தைகளுக்கும், நமக்கும் சரி ஈஸியாக டைம்பாஸ் ஆகிவிடும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+