பார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா?
இங்கிலாந்தில் உரிமையாளரின் பணத்தை சாப்பிட்டு பிரபலமாகியுள்ளது நாய் ஒன்று.
Recommended Video
லண்டன்: உரிமையாளரின் பணத்தை சாப்பிட்டு இணையத்தில் பிரபலமாகியுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்று.
இங்கிலாந்து வடக்கு வேர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜூடித் ரைட் என்பவர் ஓஷி என்ற லேப்ராடால் வகையின நாய் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ஜூடித்திற்கு வர வேண்டிய 160 பவுண்ட் பணத்தை அவரது தபால் பெட்டியில் சம்பந்தப்பட்டவர்கள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அப்போது ஜூடித் குடும்பத்தார் வீட்டில் இல்லாததால், அப்படி அவர்கள் செய்துள்ளனர்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், ஏற்கனவே பசியில் இருந்த அவர்கள் வீட்டு நாய், தபால் பெட்டியில் ஏதோ பொட்டலம் இருப்பதைக் கண்டதும் குஷியாகி விட்டது. 160 பவுண்டு பணத்தையும் அது மென்று தின்றுள்ளது. இந்திய மதிப்பில் அது சுமார் ரூ. 14,500 ஆகும்.
வீட்டிற்கு திரும்பியதும், நாய் தின்று போட்டு மீதமிருந்த பணத் தாள்களைக் கண்டதும் ஜூடித் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர், அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அந்நாயை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நாயின் சிகிச்சைக்கு என தனியாக 130 பவுண்டுகள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ. 11,000) செலவாகியுள்ளது. ஆனால், நாயின் வயிற்றுக்குள் சென்ற பணத்தை எடுக்க இயலவில்லை.
இதற்கு முன்பு அந்த நாய் இப்படி பணத்தை சாப்பிட்டதில்லையாம். 'பணம் போனால் போகிறது, நல்வாய்ப்பாக நாயின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் மீட்டு விட்டோம்’ என ஜூடித் தெரிவித்துள்ளார். அதோடு, எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காதவண்ணம் முன்னேற்பாடுகளை செய்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நாயின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பார்க்க பாவம் போல் அது காட்சி தருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications