இரும்பு கேட்டில் எலும்பு கூடு.. பேரை கேட்டாலே திகிலாக இருக்கே.. 100 விஷச் செடிகளை கொண்ட கார்டன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆல்விக் என்னும் தோட்டத்தில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய 100 க்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன.

தோட்டம் என்றாலே ஆசை ஆசையாய் விதைகளை விதைத்து, அது முளைத்து செடியாகி பூவாகி, காயாகி கனியாகும் இன்பமே தனிதான். மரங்கள்தான் நம் சுற்றுச்சூழல் மாசை தடுக்கும். மழையை ஏற்படுத்தும்.

இதனால் மரங்கள் வளர்க்கும் கலை ஆங்காங்கே ஊக்குவிக்கப்படுகின்றன. செடிகளை நர்சரிகளில் காசு கொடுத்து வாங்கும் நிலையில் திருமணங்கள், விழாக்களில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் செயல்களை சமூகஆர்வலர்கள் செய்து வருகிறார்கள்.

மாந்தோப்பு

மாந்தோப்பு

மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு உள்ளிட்டவற்றை பார்த்தால் மனதிற்கு இதமான சூழலை ஏற்படுத்தும். ஆனால் இங்கிலாந்தில் ஒரு தோட்டம் இருக்கிறதாம். அதன் பேரே பாய்சன் தோட்டமாம். சரி சும்மா பெயர்தான் அப்படி வைத்திருக்கிறார்கள் என நினைத்த நிலையில் உண்மையிலேயே அந்த தோட்டம் விஷத்தன்மை கொண்டதாம்.

 ஆல்ன்விக்

ஆல்ன்விக்

இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள ஆல்ன்விக் என்ற பகுதியில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. உலகின் மிகக் கொடிய, ஆபத்தான தோட்டமாக அழைக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் மனிதர்களை கொல்லக் கூடிய 100 க்கும் மேற்பட்ட விஷச் செடிகள் உள்ளன. இந்த தோட்டத்தை தன்னந்தனியே போய் பார்வையிட முடியாது.

பாய்சன் கார்டன்

பாய்சன் கார்டன்

இதற்காக ஒரு வழிகாட்டியை தோட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அவருடன் மட்டுமே இந்த தோட்டத்தை பார்வையிடலாம். இந்த தோட்டத்தின் வெளிப்புறத்தில் ஒரு இரும்பு கேட் உள்ளது, அதன் மேல் ஆர்ச் வடிவில் உள்ள பலகையில் The Poison Garden என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இரும்பு கேட்கள்

இரும்பு கேட்கள்

வலது, இடது என இரும்பு கேட்களிலும் ஆபத்தை குறிக்கும் வகையில் மண்டை ஓடுகளின் படங்கள் உள்ளன. மேலும் இந்த தாவரங்கள் உங்களை கொல்லக் கூடும் என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த தோட்டத்தில் உள்ள பூக்களை யாரும் தொடக் கூடாது. வாசனை எப்படி இருக்கிறது என்று கூட நுகரக் கூடாது. சாப்பிட்டு பார்க்கக் கூடாது.

 தோட்ட நிர்வாகம்

தோட்ட நிர்வாகம்

இப்படி தோட்ட நிர்வாகம் எச்சரித்தாலும் சிலர் ஆர்வ கோளாறால் செடிகளை நுகர்ந்து பார்த்துவிட்டு மயங்கிவிழுகிறார்கள். இந்த விஷ தோட்டத்தை ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் பார்வையிடுகிறார்கள். உலகின் மிகக் கொடிய நச்சு தாவரம் என கின்னஸ் சாதனை படைத்த ரிசின் இங்கு உள்ளது. இங்குள்ள தாவரங்கள் நச்சுத் தன்மை கொண்டிருந்தாலும் கொடிய நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

 மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

yew tree எனப்படும் விஷச் செடியை சாப்பிட்டால் 20 நிமிடங்களுக்குள் ஒருவரை கொன்றுவிடும். ஆனால் இது மார்பக புற்றுநோய்க்கு மருந்தாக கொடுக்கும் taxol எனும் மருந்து இந்த மரத்திலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது. இந்த தோட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் உள்ள தாவரவியல் ஆர்வலர்களும் இந்த தோட்டத்தை பார்வையிடுகிறார்கள். அவர்கள் மான்க்ஷூட், ரோடோடென்டிரான்ஸ், வுல்ப்ஸ் பேன் ஆகிய செடிகளையும் பார்வையிட வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+