"மனைவியுடன் 7 பேர் உல்லாசம்".. மயக்க நிலையில் வைத்து 20 ஆண்டுகளாக முதியவர் செய்த கொடூரம்
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த 60 வயது நிரம்பிய முதியவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயக்க நிலையில் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, மனைவியுடன் மற்றவர்களையும் உடலுறவு வைக்க அனுமதித்துள்ளார். டெலிகிராம் குழுவால் அவர் சிக்கிய நிலையில் மனைவியுடன் உல்லாசமாக இருப்பது போன்ற 10 லட்சத்துக்கும் அதிகமான போட்டோ, வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஸ்டாக்போர்ட் பகுதியை சேர்ந்தவர் 'எக்ஸ்' (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 60. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். 'எக்ஸ்'ஸிற்கு வினோத பழக்கம் உள்ளது. மனைவியை மயக்க நிலையில் உடலுறவு கொள்வதில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார்.

இதற்காக மனைவிக்கு அடிக்கடி போதைப்பொருள் கொடுத்து மயங்க வைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் இருந்து அவரது புத்தி இன்னும் மோசமானது. மயக்க நிலையில் இருக்கும் தனது மனைவியை வெளிநபர்களுக்கும் அனுபவித்தால் எப்படி இருக்கும்? என்ற கொடூர புத்தி அவருக்கு வந்துள்ளது.
இதற்காக அவர் தனியாக டெலிகிராமில் குழு ஒன்றை தொடங்கினார். அதில் பலரும் இணைந்தனர். அவர்களிடம் தன்னுடைய மனைவியை மயக்கநிலையில் அனுபவிக்க யாருக்கு விருப்பம் என்றும் கேட்பதும், விருப்பம் உள்ளவர்களை வீட்டுக்கு வரவழைத்து மனைவிக்கு தெரியாமல் உல்லாசமாக இருக்க வைத்ததும் தெரியவந்தது.
கடந்த 2025ம் ஆண்டில் எக்ஸ் கைது செய்யப்பட்டார். இந்த கைதின் பின்னணியில் ஜெர்மனி பத்திரிகையாளர்கள் உள்ளனர். தூங்கி கொண்டிருக்கும் பெண் அல்லது போதையில் மயங்கி இருக்கும் பெண்ணுடன் உடலுறவு வைக்கும் விவகாரம் பற்றிய செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிட்டு வந்தனர். அப்போது தான் எக்ஸ்ஸின் டெலிகிராம் குழு பற்றி அவர்களுக்கு தெரியவந்தது.
தனது மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்பும் நபர்களுக்காக எக்ஸ் தனியாக டெலிகிராமில் குரூப் ஒன்றை தொடங்கி இருந்ததை அறிந்த ஜெர்மனி பத்திரிகையாளர்கள் அதில் இணைந்தனர். எக்ஸ் தனது மனைவிக்கு இழைத்த கொடுமையை அந்த குழுவில் நடந்த உரையாடல் மூலம் ஜெர்மனி பத்திரிகையாளர்கள் அறிந்து கொண்ட நிலையில் அவர்கள் வெளியுலகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தான் எக்ஸ் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு மான்செஸ்டர் மின்ஷல் ஸ்ட்ரீட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது எக்ஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். 60 வகையான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் பாலியல் பலாத்காரம், மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்தல், மனைவிக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக வீடியோ, போட்டோ எடுத்தல், அந்த போட்டோக்களை மற்றவர்களுக்கு அனுப்புதல் உள்பட மொத்தம் 60 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட உள்ளது.
எக்ஸ் கைதானபோது அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் மயக்க நிலையில் இருக்கும் அவரது மனைவியை அவரும், பிற நபர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான போட்டோ, வீடியோக்கள் என்று மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தன. அதோடு எக்ஸ் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவிக்கு இத்தகைய கொடுமையை வழங்கி உள்ளார். செல்போனில் உள்ள போட்டோ, வீடியோக்கள் தான் வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது. குறிப்பாக கடந்த 2014ம் ஆண்டு முதல் 2025 வரை அவர் இணையதளங்களில் அதிகமாக போதைப்பொருள், மயக்கமருந்து உள்ளிட்டவற்றை தான் தேடியிருப்பது தெரியவந்துள்ளது.
தற்போதைய சூழலில் ஸ்டாக்போர்ட் பகுதியை சேர்ந்த டாக்ஸி டிரைவர் பிலிப் வைல்ட் (59), ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் முகமது சபீர் (28), ரிட்டயர்ட் ராபர்ட் ஸ்டிவார்ட் (70), சீனியர் பாராமெடிக் ஜோனதன் கிரிக் (43), ஹீவுட் பகுதியை சேர்ந்த ஷீட் மெட்டல் தொழிலாளி ரிச்சர்ட்டவுன்சென்ட் (38), வைதென்ஷா பகுதியை சேர்ந்த தூய்மை பணி நிறுவன பணியாளர் ஆலன் கீலன் (42), ஜோர்டன் வாலஸ் (31) உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது.
இவர்கள் 7 பேரும் எக்ஸின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மயக்கநிலையில் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதவிர டெர்பிஷயரின் இல்கெஸ்டனை சேர்ந்த டேவிட் கிரேவ்ஸ் (60), டேனியல் ராய்னர் (42) ஆகியோர் எக்ஸ் தனது மனைவிக்கு போதைப்பொருள் வழங்க உதவி செய்துள்ளனர். இருப்பினும் இவர்கள் 9 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
