"பலான" கருவி.. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே.. திகைத்த வரலாற்று ஆய்வாளர்கள்.. அடேங்கப்பா!
2000 ஆண்டு பழமையான பொருள் ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள சுமார் 2000 ஆண்டு பழமையான பொருள், இப்போது பேசுபொருளாகியுள்ளது. அது பாலியல் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது இணைய உலகில் இன்டர்நெட்டை திறந்தாலே ஆபாச படங்கள் தான் கொட்டி கிடக்கிறது. சிறுவர்கள் கூட எளிதாக அணுகும் வகையில் தான் ஆபாச கண்டென்டகள் உள்ளன.
இதற்கான கட்டுப்பாடுகள் வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளன. சிறுவர்களும் எளிதாக இதுபோல ஆபாச வீடியோக்கள் பார்க்கும் வகையில் இருப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

2000 ஆண்டுகள்
ஆபாச படங்களை போலவே வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளும் ரொம்பவே பிரபலம்.. அமெரிக்கா போன்ற நாடுகளில் பொது இடங்களிலேயே செக்ஸ் பொம்மைகள் விற்க தனியாக கடைகளே இருக்கும். இவை எல்லாம் பொதுவாக இப்போது இந்த நவீன காலத்தில் உருவாக்கப்பட்டதாகவே நினைத்திருப்போம். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செக்ஸ் பொம்மைகளை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பேசுபொருள் ஆகியுள்ளது.

முதலில் குழப்பம்
இங்கிலாந்தில் உள்ள ரோமானியக் கோட்டையான விண்டோலண்டாவில் அவர்கள் சமீபத்தில் வினோதமான ஒரு பொம்மையை கண்டுபிடித்துள்ளனர். மரத்தால் ஆன இந்த பொம்மை பார்ப்பதற்கே விச்சித்திரமாக இருந்துள்ளது. ஆய்வில் தான் இது பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 6.3 அங்குல நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இது, காலணிகள் மற்றும் ஆடை அணிகலன்கள் இருந்த இடத்தில் காணப்பட்டுள்ளது. இதை எதற்கு பயன்படுத்தினார்கள் என்பது அவர்களுக்கு முதலில் தெளிவாக தெரியவில்லை.

அந்த உறுப்பு
ஏதாவது தாக்குதல் ஆயுதம் என்றே முதலில் ஆய்வாளர்கள் நினைத்துள்ளனர்.. இருப்பினும், நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் டப்ளின் யுனிவர்சிட்டி வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் இந்த பொருளுக்கு ஆணுறுப்பை போல பல தன்மைகள் இருப்பதாக கூறி, சில கேள்விகளை எழுப்பினர். ரோமானியப் பேரரசு காலத்தில் துரதிர்ஷ்டத்தை தவிர்க்கும் ஒரு வழியாக ஆணுறுப்பை கருதியுள்ளனர். ஆணுறுப்பின் சிறிய வடிவங்களை பதக்கங்களாகவும் வீட்டு அலங்காரத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

பாலியல் பொம்மை
ஆனால், இந்த கருவி பெரிதாக இருந்த நிலையில், இது ஒரு பாலியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த பொருளின் இரு பக்கங்களும் மென்மையாக இருந்துள்ளது. இதையும் தங்கள் கணிப்பிற்கான ஆதாரமாக குறிப்பிடுகின்றனர். இந்த மரப் பொருள் முதலில் 1992இல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஹட்ரியன் சுவருக்கு தெற்கே உள்ள ரோமானிய கோட்டையான விண்டோலண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இவர்கள் கணிப்பின்படி பாலியல் பொம்மை இருந்தால்.. அது பிரிட்டனின் கண்டெடுக்கப்பட்ட பழமையான பாலியல பொம்மையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெளிவாக சொல்ல முடியாது
இது குறித்து ஆய்வாளர் ராப் காலின்ஸ் கூறுகையில், "இது மரத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. மேலும், இதன் அளவை வைத்து பார்க்கும் போது.. எதற்காக இதை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதில் பல கேள்விகள் எழுகிறது. இதன் நோக்கம் குறித்து நாம் உறுதியாக சொல்ல முடியாது.. மற்ற பொருட்கள் அதிர்ஷ்டத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இதன் சைஸை வைத்து பார்க்கும் போது. அதிர்ஷ்டத்திற்கு பயன்படுத்தியதாக தெரியவில்லை.

மக்கள் காட்சி
இதை வேறு சில காரணங்களுக்கு தான் பயன்படுத்தியிருப்பார்கள். அதை துல்லியமாக நம்மால் சொல்ல முடியாது.. அழகுசாதனப் பொருட்கள் அல்லது மருந்துகளுக்கான பொருட்களை அரைக்க இதை பயன்படுத்தியிருக்கலாம்.. அல்லது அதிர்ஷ்டத்திற்காக இதை சிலையாக கூட பயன்படுத்தியிருக்கலாம்" என்றார். இந்த பொருள் இப்போது இங்கிலாந்தில் இருக்கும் நார்தம்பர்லேண்டில் உள்ள விண்டோலண்டா அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications