Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக பொருளாதாரம்.. இன்னும் 12 வருடத்தில் மொத்தமாக மாறப்போகும் இந்தியா? பறந்து வந்த "நல்ல சேதி"

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று இங்கிலாந்தின் வணிக மேலாண்மை ஆலோசக நிறுவனம் கணித்திருக்கிறது.

கடந்த 2008-2009ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட மந்தநிலைதான் நவீன வரலாற்றில் மனித குலம் எதிர்கொண்ட மிகப்பெரும் சவால் என்று சொல்லாம். ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறி போனது. வேலையிழப்புகள், சிறு குறு நிறுவனங்கள் திவால், விலைவாசி உயர்வு, வங்கி கடனின் வட்டி விகிதங்கள் உயர்வு போன்றவை நடுத்தர வர்க்க மக்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கியது. அதன் விளைவு 2022 வரை பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் கொரோனா தொற்று பாதிப்பு, கட்டுப்பாடுகள் இந்த மந்தநிலையை மேலும் தீவிரப்படுத்தின. ஆனாலும் உலக நாடுகள், "இனி கோரோனாவுடன் வாழ பழகுவோம்" என்று கூறி கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. ஆனால் முற்றிலுமாக அல்ல.

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

எனவே இப்படி இருக்கும் நிலையில்தான் இங்கிலாந்தின் வணிக மேலாண்மை ஆலோசக நிறுவனமான CEBR எதிர்வரும் 2023ம் ஆண்டு உலகம் மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று கூறியிருக்கிறது. நடப்பாண்டில் உலக பொருளாதாரம் முதன் முறையாக 100 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டது. ஆனால் அப்படி இருந்தும் அடுத் ஆண்டில் வங்கிகள் பணவீக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும். இவ்வாறு அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்கிய சாமானிய மக்கள் கூடுதல் வட்டியை செலுத்த நேரிடும் இதனால் ஒரு பெரும் நெருக்கடி உருவாகும் என்று CEBR கணித்திருக்கிறது.

மந்தநிலை

மந்தநிலை

இவ்வாறு நெருக்கடி உருவானால் 2023ம் ஆண்டில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2%ஆக மட்டுமே வளரும். இதற்கான வாய்ப்புகள் 25% வரை இருக்கிறது. ஏனெனில் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது கடன் பெற்ற சாமானிய மக்கள் வட்டியை சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று இதர செலவுகளை குறைத்துக்கொள்வார்கள். இவ்வாறு குறைப்பதன் மூலம் சந்தையில் மக்களுக்கு உருவாக்கப்பட்ட பொருட்கள் அப்படியே தேங்கி நிற்கும். இந்த தேக்கம் ஆண்டின் முடிவில் பார்க்கும் போது உலக பொருளாதார மந்த நிலையாக ஒரு மலைபோல உயர்ந்து நிற்கும் என்று CEBR கூறுகிறது.

சீனா

சீனா

இந்த நிலை அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்கு இருக்கலாம். ஆனால் 2037ம் ஆண்டு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அப்படியே இரட்டிப்பாக உயரும். அதற்கேற்ற பலன்கள் சாமானியர்களுக்கு கிடைக்காது. மாறாக பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக உருவெடுப்பார்கள். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மேலும் ஏழைகளாக மாறுவார்கள். பொருளாதாரத்தை போல பொருளாதார சமமின்மையும் இரட்டிப்பு வேகத்தில் வளரும். சீனாவை பொருத்த அளவில் 2036ம் ஆண்டு வரை அந்நாடு அமெரிக்காவின் பொருளாதாரத்தை முந்தாது.

இந்தியா

இந்தியா

அதேபோல எதிர்வரும் மந்தநிலை சீனாவை தாக்கக்கூடும் என்பதால் மற்ற உலக நாடுகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும். இந்தியாவை பொறுத்த அளவில் வரும் 2035ம் ஆண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக பரிணமிக்கும். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் எனவும் CEBR கூறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை பொறுத்த அளவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதால் அதனுடைய வளர்ச்சி கொஞ்சம் மந்தமாகவே இருக்கும் என CEBR கணித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+