3க்குத்தான் பிளான் போட்டோம்.. பட் 21 வரை போய்ருச்சு.. கையை பிசையும் லண்டன் அம்மணி!
21வது குழந்தை போதும் என லண்டன் பெண் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
Recommended Video

லண்டன்: "ஆக்சுவலா 3 குழந்தைகள்தான் பிளான்... அது என்னமோ தெரியல.. எங்களுக்கு 21 வரை லிஸ்ட் கொஞ்சம் பெரிசா போயிடுச்சு" என்கிறார் ஒரு பெண்மணி!
நம்ம ஊரில் 2, 3 குழந்தைகளை பெத்து அவங்கள வளர்க்கறதுக்கே நிறைய பெற்றோருக்கு திண்டாட்டமா போயிடுது. ஆனா ஒரு அம்மா லண்டன்ல எப்படித்தான் இத்தனை குழந்தைகளை பெத்துக்கிட்டாங்களோன்னு ஆச்சரியமா இருக்கு.

3 தான் பிளான்
சூ ரேட்போர்ட் என்ற பெண்ணுக்கு 42 வயதாகிறது. இவருடைய கணவர் பெயர் நோயல். ரொம்ப ஸ்பெஷலான ஜோடி இவர்கள். ரெண்டு பேருக்குமே குழந்தைகள்-ன்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால் 2, இல்லன்னா 3 குழந்தைகள் பெத்துக்கணும்னு முடிவு பண்ணாங்க. ரெண்டு பேரும் இப்படி முடிவு பண்ணதோட சரி.. வருஷா வருஷம் குழந்தைகள் பிறந்துட்டுதான் இருந்தது.

மன மாற்றம்
அப்பறமா பார்த்தா 9 குழந்தைகள் ஆயிடுச்சே.. குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு திரும்பவும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவ்வளவுதான் அந்த முடிவும். திரும்பவும் வீட்டில் குழந்தை சத்தம்தான்!! இப்போ இவங்களுக்கு 21 -வது குழந்தை பிறந்துடுச்சு. 2 நாளுக்கு முன்னாடிதான் குழந்தை பிறந்துள்ளது.

800 வாரங்கள் கர்ப்பம்
ஒருவழியா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கலாம்னு திரும்பவும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இதற்கு காரணம் சூ ரேட்போர்ட் 3 குழந்தைகளுக்கு பாட்டியாகி விட்டாங்களாம். ஆமாம்.. மூத்த பெண், மகனுக்கு குழந்தை பிறந்துவிட்டது. 21 குழந்தைகள்ப பெற்ற இவர், இதுவரை 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.

குடும்ப கட்டுப்பாடு
14 வயசில பிள்ளை பிறக்க ஆரம்பித்தது 42 வயசு வரைக்கும் நடந்துட்டே இருந்திருக்கு. இப்பவும் இந்த ஜோடிக்கு அடுத்த குழந்தை எப்போ பிறக்கும், அதை கொஞ்சி விளையாட மத்த குழந்தைகள் ஆர்வமா இருக்காங்களாம். பாட்டியா? இப்போ குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு முடிவு பண்ணி அதுக்கு அப்ளிகேஷனும் போட்டிருக்காங்களாம்.

டவுட்டுதான்
அது சரி.. இவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி இதுவரைக்கும் எதை கரெக்டா பண்ணியிருக்காங்க? இப்போ இந்த முடிவு கூட டவுட்டாவே இருக்கு!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications