பிரிட்டன் பிரதமராகும் முதல் இஸ்லாமிய பெண்? யார் இந்த பாகிஸ்தான் வம்சாவளி! எப்ஸ்டீன் பைல்ஸால் சம்பவம்
லண்டன்: எப்ஸ்டீன் பைல்ஸ் சர்ச்சையில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் சிக்கியுள்ளார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த பிரிட்டன் பிரதமராக ஷபானா மஹ்மூத் பொறுப்பாக வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியான இவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் பாலியல் குற்றவாளி ஆவார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்தார். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜெஃப்ரி எப்ஸ்டீனும், பில் கேட்ஸ் உள்பட பலரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பல பிரபலங்களுடன் உல்லாசம் அனுபவிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டிரம்ப் உள்பட அமெரிக்காவின் முக்கிய புள்ளிகள் பலரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இளம்பெண்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் கூட வெளியாகின.
எப்ஸ்டீன் பைல்ஸ்
பாலியல் வழக்கில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் இறந்தார். இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே அவரை தீர்த்து கட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருக்கும்போது பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்களுடனான தொடர்பு மற்றும் அவர்களை பற்றிய விஷயங்களை இ-மெயிலில் சேமித்து வைத்திருந்தார். இதுதான், ஜெஃப்ரி பைல்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
பிரிட்டன் பிரதமர் பெயர்
இந்த ஆவணங்களை அமெரிக்க நீதித்துறையவில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 30 லட்சத்து்கும் அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பெயர் உள்ளது. இவர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியான பீட்டர் மேண்டல்சனை அமெரிக்கத் தூதராக நியமித்ததும், அதன்பிறகு அவரை நீக்கியதாகவும் எப்ஸ்டீன் பைல்ஸில் உள்ளது.
பிரிட்டன் அரசியலில் பூகம்பம்
இது பிரிட்டன் அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் பிரிட்டன் தலைமை ஊழியர் மார்கன் மெக்ஸ்வீனியின் பெயரும் இந்த பைலில் இருந்தது. இதனால் மார்கன் மெக்ஸ்வீனி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்த ராஜினாமா பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கான நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்பில் இருந்ததால் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் அவர் இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தான் வம்சாவளி பெண்
இந்நிலையில் தான் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பவர் தான் ஷபானா முகமது. இவர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்நதவர். இவர் பிர்மிங்காம் லேடிவுட் தொகுதியின் எம்பியாக உள்ளார். சட்டப்படிப்பை முடித்தவர்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் கட்சியில் சேர்ந்தார். பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் தற்போது முன்னணி தலைவராக இருக்கும் இவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார். காவல்துறை, தேசிய பாதுகாப்பு, குடியேற்றம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
மேலும் இவர் தொழிலாளர் கட்சியில் இஸ்லாமிய தலைவர்களில் முதன்மையானவராக உள்ளார். இந்நிலையில் தான் கெய்ர் ஸ்டார்மரை தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications