3 நாட்களுக்கான பொருட்களை.. வீட்டில் ஸ்டாக் வச்சுக்கோங்க! மக்களுக்கு ஐரோப்பா உத்தரவு! திடீர் பதற்றம்
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குறைந்தபட்சம் 72 மணிநேரம் தாக்கு பிடிக்கும் அளவிற்கு பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திடீர் நெருக்கடியை, லாக்டவுன்களை அல்லது இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அத்தியாவசிய பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு பால் எப்போதும் இருக்க வேண்டும். டாய்லெட் பேப்பர்கள் இருக்க வேண்டும். அவசரத்திற்கு சமைக்கும் பிரெட் போன்ற உணவுகள் தயாராக இருக்க வேண்டும். இது எல்லாம் இருப்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். நிலைமை மோசமாகும் பட்சத்தில் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
என்ன காரணம்
ஐரோப்பா எடுக்கும் இந்த முடிவிற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பா மீது 25% கூடுதல் வரிகளை விதிக்க உள்ளார். ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா - ஐரோப்பா இடையே உக்ரைன் விவகாரத்தில் மோதல் உள்ளது. அதோடு சமீபத்தில்தான் அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இப்போது ஐரோப்பாவிற்கு கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன.
டிரம்ப் கொண்டு வரும் வரிகள் இந்த வரும் வாரம் முதல் அமலுக்கு வர உள்ளன. இதனால் ஐரோப்பாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். பொருட்கள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும். முக்கியமாக அத்தியவாசியா பொருட்கள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும். ஐரோப்பா யூனியன் பொருளாதார ரீதியாக ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இப்போது டிரம்ப் போடும் வரியால் ஐரோப்பா பொருளாதாரம் இன்னும் மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
உக்ரைன் போர்
இன்னொரு பக்கம் உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை நிறுத்திவிட்டது. அதோடு ரஷ்யாவிற்கு அமெரிக்கா நெருக்கம் ஆக தொடங்கிவிட்டது. டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.
சமாதானப் பேச்சுவார்த்தையில் தங்களை சேர்த்துக்கொள்ளாததை அடுத்த ஐரோப்பிய தலைவர்கள் பாரிஸில் அவசரக் கூட்டத்தை மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் டிரம்பின் செயல்பாடு பற்றி அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பதால் உக்ரைன் போர் பேச்சுவார்த்தையில் டிரம்ப் கை ஓங்கி உள்ளது.. புடின் கையும் ஓங்கி உள்ளது.
டிரம்பிற்கும் உக்ரைனை பெரிதாக பிடிக்காத காரணத்தால்.. உக்ரைனை அழுத்தி.. அந்த நாட்டிற்கு எதிரான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. உக்ரைனுக்கு எதிரான கடுமையான முடிவுகளை இதில் எடுக்கலாம்.. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது நேரடியாக ஐரோப்பாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால் ஆபத்து கருதி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குறைந்தபட்சம் 72 மணிநேரம் தாக்கு பிடிக்கும் அளவிற்கு பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications