ஆபாச இணையதளங்களுக்கு வரும் புது கட்டுப்பாடுகள்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி முடிவு.. மேட்டர் இதுதான்
லண்டன்: உலகளவில் அதிகமானவர்கள் பார்க்கும் 3 ஆபாச இணையதளங்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இணையதளங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் உள்ளன. இதனால் இணையதளங்களில் மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, கேம் விளையாடுவது என மக்கள் எப்போதும் செல்போனும், கையுமாகவே உலா வருகின்றனர்.

அதேவேளையில் புதிய தொழில்நுட்பங்களை பார்த்து அறிவை விரிவாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் செல்போன்கள் பயன்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிகமாக தேடும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஏராளமான ஆபாச இணையதளங்களும் செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில் Pornhub, Xvideos மற்றும் Stripchat உள்ளிட்ட ஆபாச இணையதளங்களை அதிகமானவர்கள் பார்க்கின்றனர். இதற்கிடையே தான் இந்த 3 இணையதளங்களும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. அதாவது இந்த இணையதளங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த இணையதளங்களின் பயன்பாடு என்பது ஐரோப்பிய ஒன்றியங்களில் 45 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையின் படி பார்த்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைமுறையில் உள்ள டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் அடிப்படையில் அவை மிகப்பெரிய இணையதளங்களாக வகைப்படுத்தப்படும். இத்தகைய சூழலில் தான் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது இணையதளங்களை பயன்படுத்தும் நபர்களின் வயது சரிபார்ப்பு உள்ளிட்ட விஷயங்களை மேம்படுத்த வேண்டும். குழந்தைகள் சர்ந்த ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. டீப்பேக் வீடியோக்கள் பதிவேற்றுவதை தடுக்க வேண்டும். 18 வயது நிரம்பாதவர்கள் ஆபாச இணையதளங்கள் பார்ப்பதை தடுக்க வேண்டும். மேலும் சட்டப்பூர்வமான பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு இணங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4 மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை 3 இணையதளங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் அந்த இணையதளங்ளின் உலகளாவிய வருமானத்தில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தமட்டில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வலைதளங்களில் கூகுள், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றுக்கு இந்த புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் புதிய விதிமுறைகளை பின்பற்ற அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. இத்தகைய சூழலில் தான் Pornhub, Xvideos மற்றும் Stripchat ஆகிய 3 ஆபாச இணையதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications