46 மாடி கட்டிடம்.. எந்த பாதுகாப்பும் இன்றி சரசரவென்று ஏறிய 56 வயது ஸ்பைடர் மேன்.. வாவ் வீடியோ!
பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்ட் லண்டனில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் வேகமாக ஏறி சாதனை செய்துள்ளார்.
Recommended Video

லண்டன்: பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்ட் லண்டனில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் வேகமாக ஏறி சாதனை செய்துள்ளார்.
உலகம் முழுக்க இப்போது உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வது வழக்கமாகி வருகிறது. கயிறு கட்டியும், கயிறு கட்டாமலும் வேகமாக பலர் ஏறி சாதனை செய்து வருகிறார்கள்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் சிலரும் கூட இப்படி செய்கிறார்கள். இந்த நிலையில் பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்ட் லண்டனில் இப்படி ஒரு சாதனை செய்துள்ளார்.
|
யார் இவர்
பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்டுக்கு தற்போது 56 வயது ஆகிறது. இவர் பிரான்சின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை 50க்கும் அதிகமான உலகின் உயரமான கட்டிடங்களில் எல்லாம் வேகமாக ஏறி சாதனை செய்துள்ளார். தற்போது இவர் லண்டனில் வசித்து வருகிறார்.
|
படு வேகம்
இந்த நிலையில் லண்டனில் உள்ள பைனான்ஸ் ஸ்டிரீடில் உள்ள ஹெரான் டவரில் இவர் ஏறியுள்ளார். அங்கு இருப்பதிலேயே இதுதான் பெரிய கட்டிடம் ஆகும். இதில் 46 மாடிகள் உள்ளது. இதன் மொத்த உயரம் 240 மீட்டர் ஆகும். இதைத்தான் இவர் 40 நிமிடத்தில் வேகமாக வெளிப்பக்கத்தில் இருந்து ஏறியுள்ளார்.
|
பாதுகாப்பு இல்லை
எந்த ஒரு சின்ன பாதுகாப்பும் இன்றி, வெறும் கிளவுஸ் அணிந்து வேகமாக இவர் ஏறியுள்ளார். இவர் வெறும் கிளவுஸ் மட்டும் அணிந்து இப்படி முழுமையாக ஏறி இருக்கிறார். முதல்முறை ஒருவர் இவ்வளவு பெரிய கட்டிடத்தை எந்த பாதுகாப்பும் இன்றி ஏறியுள்ளார்.

கைதானார்
கடைசியில் இவர் திறமையாக அனைத்து மாடிகளையும் ஏறிவிட்டார். இதில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. கடைசியில் எப்போதும் போல இவர் போலீசால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications