தாயாரின் மரணத்தால் காதலர் சோகம்.. வருங்கால மாமனாரை மணந்து நிஜ தாயாக மாறிய காதலி!
காதலரின் சோகத்தை மாற்றுவதற்காக அவரது தந்தையையே காதலி திருமணம் முடித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: தாய்ப்பாசத்தால் காதலன் ஏங்கக்கூடாது என்ற காரணத்திற்காக, காதலனின் தந்தையை காதலி திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
காதலில் விழுந்து விட்டால், தனது இணையின் மகிழ்ச்சிக்காக எந்தவொரு முடிவையும் எடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம் வெளிநாட்டில் நடந்துள்ளது. நான் உனக்கு அம்மா மாதிரி என காதலிகள் காதலனிடம் சொல்வது வெறும் வாய் வார்த்தையில்லை என்பதை தனது செயல் மூலம் நிரூபித்துள்ளார் டிக் டாக்கில் ys.amri என்ற ஐடியில் உள்ள பெண்.
இந்தப் பெண் பல வருடங்களாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அந்தக் காதலனின் தாய் திடீரென உயிரிழந்து விட்டார். இதனால் அந்தக் காதலன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். தனது காதலனின் சோகத்தை நீக்க அதிரடியாக முடிவெடுத்துள்ளார் அப்பெண். அதன்படி காதலனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு, தனது காதலனுக்கு அம்மாவாகவே மாறி விட்டார்.

காதலர் வேதனை
இது குறித்து தனது டிக்டாக் பக்கத்தில் அப்பெண் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் காதலரின் அம்மா சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். என்னுடைய காதலர் அவரின் தாயார் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அதனால் அந்த துக்கத்தை என் காதலானால் தாங்கி கொள்ள முடியவில்லை.

அதிரடி முடிவு
எப்போதும் சோகமாகவே என் காதலர் இருந்தார். அவர் முன்பு போல் இல்லை. என் காதலன் தாய் பாசத்தை இழந்து கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. காதலனுக்கு அவர் இழந்த தாய் பாசத்தை கொடுக்க உண்மையான தாயாகவே மாற திட்டமிட்டேன். காதலனின் தந்தையிடம் பேசி அவரை திருமணம் செய்து கொண்டேன்.

வைரலான பதிவு
இதன்மூலம் இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் அவருக்குக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு அவரின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்" என உணர்ச்சிப்பூர்வமாக அப்பெண் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

விமர்சனம்
'அப்பெண் நினைத்திருந்தால், மனைவியாக இருந்து கொண்டே காதலருக்குத் தாய்ப் பாசத்தைக் கொடுத்திருக்க முடியும். இது தேவையில்லாத வேலை' என சிலர் அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ, 'இது அப்பெண் தனது காதலர் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பாசத்தையே காட்டுகிறது' என அப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications