துள்ளி குதித்த சார்லஸ்.. இளவரசி சொன்ன ஹேப்பி நியூஸ்.. மறைந்த ராணிக்கு கூட இந்த விஷயம் தெரியுமாமே
4வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்
லண்டன்: பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் மறுபடியும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது... அதைவிட முக்கியமாக இந்த விஷயம் இறந்துபோன ராணிக்கும் தெரியுமாம்..
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.. அவர்கள் திருமணம் முடிந்ததில் இருந்தே, கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற பேச்சு தான் ஓடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அவரது தோழி ஜெசிகா ஹே என்பவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது..

ஓபன் டாக்
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வில்லியம், கேட் தம்பதியினர் சேர்ந்து வெளியிடலாம் என்று பிளான் செய்து வைத்திருந்தார்களாம்.. அதற்குள் அந்த தோழி முந்திக் கொண்டுவிட்டதாக சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, 2 குழந்தைகள் போதும் என்றும் இந்த தம்பதி திட்டமிட்டுள்ளதாக ஜெசிகா ஓபனாகவே சொல்லியிருந்தார்.. ஆனால், இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துவிட்டன.. ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் என்று அந்த மூன்று குழந்தைகளுக்கும் பெயர்..

4வது கர்ப்பம்
இப்போது கேட் மிடில்டன் 4-வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. கேட் மிடில்டன் தன்னுடைய 4வது குழந்தையை எதிர்பார்க்கிறார் என்றும், அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ம் தேதி, இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றி சொன்னதாகவும் அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் கூறியதாக இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் செய்தி வெளியானது.

கொள்ளுப்பேரன்கள்
மேலும், ராணி இறப்பதற்கு முன்பு, வில்லியம் அவரிடம் இதை சொன்னாராம்.. இப்படி ராணியிடம் சொல்வதால், அது தங்களுக்கு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்றும் இந்த தம்பதி நம்பினார்களாம்.. இளவரசி கர்ப்பமாக இருப்பதாக சொன்னதுமே ராணி ரொம்ப சந்தோஷப்பட்டாராம்.. இதை அறிந்து வில்லியம்- கேட் இருவருமே பூரித்து போயுள்ளார்கள்.. காரணம், ராணி தங்களுடைய பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பது இவர்களுக்கு நன்று தெரியும்.. அந்த குழந்தைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தாராம் ராணி.

பூரித்த சார்லஸ்
இளவரசி கேட் மிடில்டன் கடந்த 2 வருடங்களாகவே, மற்றொரு குழந்தையை பெற விரும்பியதாக சொல்லப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அவர் 4வது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பது தெரியவந்தள்ளது.. இந்த விஷயம் இளவரசர் வில்லியமை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. அவரைவிட, அதிகமாக துள்ளி குதித்து வருகிறார் கிங் சார்லஸ்.. காரணம், கேட் மிடில்டனின் கர்ப்பத்தைப் பற்றி அறிந்த முதல், அரச குடும்ப உறுப்பினர் மன்னர் சார்லஸ்தானாம்..!!












Click it and Unblock the Notifications