Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீங்க தான் ரியல் அம்மா.." பழைய ஓனரை தேடி ஒரு மாதம் பயணித்த நாய்.. அடுத்து நடந்த பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: அயர்லாந்து நாட்டில் கூப்பர் என்ற செல்ல நாய் செய்த காரியம் தான் இணையம் முழுக்க பேச்சாக உள்ளது. அது செய்த காரியத்தை இன்னும் யாராலும் நம்பவே முடியவில்லையாம்.

உலகளவில் அதிகமானோர் செல்ல பிராணியாக விரும்பி வளர்க்கும் விலங்காக நாய் இருக்கிறது.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய்களின் சுட்டித்தனத்தையும் அன்பையும் ரசித்தே வருகிறார்கள்.

 How a Newly-Adopted Golden Retriever Walks 64-Km Over To Former Owners

இதன் காரணமாகவே பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே கருதி வளர்க்கின்றனர். நாய்களுக்கு எதாவது சிறு பிரச்சினை என்றாலும் கூட இவர்கள் துடிதுடித்துப் போவார்கள்,.

அதேபோல நாய்களும் கூட என்ன ஆனாலும், தங்கள் உரிமையாளர்களை விட்டுக் கொடுக்காது. என்னவொரு ஆபத்து என்றாலும் எப்படியாவது உரிமையாளரைக் காக்கும். உரிமையாளரைக் காக்க உயிரை இழந்த நாய்களின் கதைகளும் நடந்தே உள்ளன. அப்படிதான் இப்போது அமெரிக்காவில் நாய் தனது உரிமையாளருக்காகச் செய்த காரியம் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

நாயின் அன்பைப் போல எதுவும் இல்லை என எப்போதும் கூறுவார்கள். அதற்குச் சிறந்து எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவத்தைச் சொல்லலாம். கூப்பர் என்ற கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை அதன் உரிமையாளர் சில காரணங்களுக்காக வேறு வழியில்லாமல் மற்றொருவருக்குத் தத்து கொடுத்துள்ளார். நாயை விட்டுப் பிரிய அவருக்கும் மனசே இல்லையாம்.

 How a Newly-Adopted Golden Retriever Walks 64-Km Over To Former Owners

இதனிடையே வடக்கு அயர்லாந்தின் கவுண்டி டைரோனில் உள்ள புதிய உரிமையாளர் வீட்டிற்கு அந்த நாய் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இருப்பினும், காரை நிறுத்தி கதவைத் திறந்த மறுநொடி அது வெளியே குதித்து ஓட தொடங்கியுள்ளது. அதன் பின்னர் அது ஒரு மாசத்திற்கு எங்கே போனது என்றே தெரியவில்லை. இது தொடர்பாக புதிய ஓனர் செல்லப்பிராணிகளுக்கான நிறுவனத்தில் புகாரும் அளித்திருந்தாராம்.

இதனிடையே கடந்த சுமார் 4 வாரங்களுக்குப் பிறகு ஏப்ரல் 22ஆம் தேதி அவர்களுக்கு ஒரு கால் வந்துள்ளது. அதாவது கூப்பரை தங்கள் நிலங்களில் பார்த்தாக பலரும் சொல்லியுள்ளனர்.. இருப்பினும், எந்தவொரு இடத்திலும் அது நீண்ட நேரம் இருக்கவில்லையாம். யாராவது அருகில் சென்றாலும் ஓடிவிட்டதாம். அதன் பிறகு நடந்தது தான் பெரிய நெகிழ்ச்சி.

 How a Newly-Adopted Golden Retriever Walks 64-Km Over To Former Owners

சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, கூப்பர் தனது பழைய உரிமையாளர் இருக்கும் வீட்டை நோக்கிச் செல்வதாகச் சிலர் கால் செய்துள்ளனர்.

மனிதர்களின் உதவியில்லாமல் நாய் சுமார் 64 கிமீ தனியாகச் சென்றுள்ளது. பிரதான சாலைகள் வழியாகவும் இரவு நேரங்களிலும் நாய் பயணித்துள்ளது. சுமார் ஒரு மாத தூரம் பயணித்து கடைசியில் அதன் பழைய உரிமையாளர் வீட்டிற்கே சென்றுள்ளது.

இது குறித்து அங்குள்ள சிலர் கூறுகையில், ''கூப்பர் மிகவும் புத்திசாலி. நாயின் உள்ளுணர்வு அவனை மீண்டும் பரிச்சயமான இடத்திற்கு அழைத்து வந்துள்ளது. இதை எப்படிச் செய்தான் எனத் தெரியவில்லை. ஆனால் எப்படியோ செய்துவிட்டான். உணவு இல்லை, தங்குமிடம் இல்லை, யாருடைய உதவியும் இல்லை. இருந்தாலும் மன உறுதியுடன் அவன் இதைச் செய்துள்ளான்.

நாங்கள் அவனை இரவும் பகலும் தேடினோம்.. ஒரு இடத்தில் அவன் இருப்பதாகத் தகவல் வரும். நாங்கள் அங்கே செல்லும் முன்பே, அவன் அங்கிருந்து கிளம்பிவிடுவான். இப்படி கூப்பர் மொத்தம் 27 நாட்கள் பயணித்து வீட்டிற்கு வந்துள்ளான். இது நம்பவே முடியாது ஒன்றைப் போலவே தெரிகிறது" என்றார்.

 How a Newly-Adopted Golden Retriever Walks 64-Km Over To Former Owners

இருப்பினும், பழைய ஓனரால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவ்வளவு பாசமான நாயான கூப்பரை வைத்துக் கொள்ள முடியவில்லையாம். இதனால் வேறு வழியில்லாமல் கூப்பரை மீண்டும் அவர்கள் புதிய உரிமையாளர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இது குறித்து நாய் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "'கூப்பர் தனது சகோதரியுடன் புது விட்டில் மெல்ல செட்டில் ஆகி வருகிறார். நாங்கள் அவ்வப்போது சென்று அவனை பரிசோதனை செய்து வருகிறோம். அவனது புதிய ஓனர் கூப்பரை மிகச் சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறார். அவன் இப்போது தான் மெல்ல வழக்கத்திற்குத் திரும்புகிறான். மெலிந்திருந்த அவன் மெல்ல எடை கூட தொடங்கியுள்ளான். இது நல்ல அறிகுறி" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+