"நின்றுபோன இதயம்!" 3 மணி நேரம் நம்பிக்கையை விடாத டாக்டர்கள்! உயிர் பிழைத்தது 20 மாத குழந்தை! எப்படி
பேச்சு மூச்சில்லாமல் இருந்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர முயற்சியால் காப்பாற்றியுள்ளனர்.
லண்டன்: நீச்சல் குளத்தில் மூழ்கியதால் 20 மாத குழந்தைக்கு இதயத் துடிப்பே நின்றுவிட்டது. 3 மணி நேரம் இதயத் துடிப்பு நின்ற போதிலும், மருத்துவர்கள் எடுத்த தீவிர முயற்சியால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த நவீன உலகில் மருத்துவத் துறை மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.. பலவித நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. இதன் காரணமாகவே மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
அதேபோல தேவையில்லாத மரணங்களும் சிகிச்சையால் தவிர்க்கப்படுகிறது. மருத்துவத் துறையில் தொடர்ந்து புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இவையெல்லாம் சாத்தியமாகிறது.

20 மாத குழந்தை
அப்படித்தான் இங்கு 20 மாத குழந்தைக்கு திடீரென இதயத் துடிப்பு நின்ற நிலையில், நவீன மருத்துவம் அந்த குழந்தையைக் காப்பாற்றியுள்ளது. அந்த குழந்தைக்கு என்ன நடந்தது.. என்ன சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றினார்கள் என்பதைப் பார்க்கலாம். பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள பெட்ரோலியா என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வெளியே இருந்த வெளிப்புறக் குளத்தில் வேலன் சாண்டர்ஸ் என்ற 20 மாத குழந்தை எதிர்பாராத விதமாக விழுந்துள்ளான்.

இதயத் துடிப்பே இல்லை
முதலில் யாருமே இதைக் கவனிக்கவில்லையாம்.. ஐந்து நிமிடங்களுக்கு மேல் அந்த குழந்தை அப்படியே இருந்துள்ளது. குளிர்ந்த நீர் நிரம்பிய அந்த நீச்சல் குளத்தில் தலைக்குப்புற அக்குழந்தை இருந்துள்ளது. அதன் பின்னரே தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது, குளிர்ச்சியாகவும் உயிரில்லாமலும் அந்த குழந்தை இருந்துள்ளது. இருப்பினும், மருத்துவர்கள் எடுத்த தீவிர முயற்சி காரணமாக அந்த குழந்தை பத்திரமாகக் காப்பாற்றப்பட்டது.

பதறிய மருத்துவர்கள்
குழந்தையை அவர்கள் எடுத்து வந்த மருத்துவமனை உயர் சிகிச்சை தரும் வசதிகளை எல்லாம் கொண்டிருக்கவில்லை.. அது ஒரு சிறிய குழந்தைகள் மருத்துவமனைதான். ஆனால், அன்று அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் தீர்க்கமாக இருந்தார்கள். இதனால் ஆய்வக ஊழியர்கள் தொடங்கி மருத்துவர் செவிலியர்கள் என அங்கிருந்த அனைவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு குழந்தையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஹெல்ப் செய்யத் தொடங்கியுள்ளனர்.

20 மாத குழந்தை
அவர்கள் குழந்தைக்கு மூன்று மணி நேரம் மாறி மாறி சிபிஆர் கொடுத்தனர். ஒவ்வொரு முறையும் ஒரு மருத்துவ பணியாளர் சிபிஆர் கொடுத்துள்ளனர். வேலன் வருவதைப் பார்த்தவுடன் மருத்துவர்கள் அனைவரும் உதவ வந்ததாக லண்டன் ஹெல்த் சயின்சஸ் தெரிவித்துள்ளது. மேலும் அதில், "இது உண்மையிலேயே ஒரு கூட்டு முயற்சி.. ஆய்வகத்தில் கையடக்க ஹீட்டர்களையும் வைத்துள்ளனர். மருத்துவ பணியாளர்களும் கம்ப்ரசர்கள் குழந்தைக்குச் சுவாசம் கொடுக்க உதவினார்கள்..செவிலியர்கள் மைக்ரோவேவ் மூலம் தண்ணீரைச் சூடாக்கி குழந்தையைச் சூடாக்க உதவியுள்ளனர்.

உயிர் பிழைத்தது
அங்கு மருத்துவமனையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் அவர்களுக்கு உதவியுள்ளனர். இந்த கூட்டு முயற்சி காரணமாகவே அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. பல மணி நேரச் சிகிச்சைக்குப் பின்னர், அந்த குழந்தைக்கு ஒரு வழியாக உயிர் பிழைத்துள்ளது. அதன் பின்னரும் கூட சில நாட்களுக்கு அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னரே.. பிப்ரவரி 6ஆம் தேதி அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.

மருத்துவர்கள்
இப்போதும் வீட்டில் அந்த குழந்தை மருத்துவ கவனிப்பில் தான் இருக்கிறது. அங்குள்ள மருத்துவர்களின் திறமை, உறுதிப்பாடு மற்றும் கூட்டு முயற்சி காரணமாகவே அந்த குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து... குழந்தையைக் காப்பாற்றினோம்.. உயிரற்ற இருந்த அந்த குழந்தைக்கு திடீரென உயிர் வந்த தருணத்தை எங்களால் மறக்கவே முடியாது" என்றார். இப்போது அந்த குழந்தை வீட்டில் மருத்துவ கவனிப்பில் இருந்து வருவதாகவும் முழு சிகிச்சைக்குப் பிறகு பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications