பாஸ்மதி அரிசிக்கு போட்டா போட்டி.. மூடை மூடையாக வாங்கிய மக்கள்.. காலியான லண்டன் சூப்பர் மார்க்கெட்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒயிட் சேப்பலில் அமைந்து இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மக்கள் மூடை மூடையாக பாஸ்மதி அரிசியை வாங்கி சென்றனர். இதனால் அங்கு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்ட பாஸ்மதி அரிசி உடனடியாக காலியான நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. திடீரென்று பாஸ்மதி அரிசிக்கு மவுசு அதிகரித்தது ஏன்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கிழக்கு பகுதியில் ஒயிட் சேப்பல் என்ற இடம் உள்ளது. இங்கு சைன்ஸ்பரி எனும் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் அரிசி, பருப்பு உள்பட உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

in-london-where-people-rushed-to-buy-discounted-basmati-rice-now-the-goes-viral

இந்நிலையில் தான் கடைக்குள் நுழைந்த மக்கள் மூடை மூடையாக பாஸ்மரி அரிசியை வாங்கி சென்றனர். இதனால் அங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பாஸ்மதி அரிசிகள் உடனடியாக காலியாகின.

குறிப்பாக இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்த மக்கள் தான் பாஸ்மதி அரிசியை அதிகமாக வாங்கி சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. லண்டனில் பாஸ்மதி அரிசியை மக்கள் மொத்தமாக மூடை மூடையாக போட்டி போட்டு வாங்கி செல்வது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி விசாரித்தபோது தான் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியானது. ஒயிட்சேப்பல் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களுக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் பாஸ்மதி அரிசியை வழக்கமான விலையை விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. பிரிட்டன் கரன்சியின்படி ஒரு மூடை 9.50 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.1,098) விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரும் போட்டி போட்டு பாஸ்மதி அரிசி மூடைகளை வாங்கி சென்றுள்ளனர்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்க்கும் ஒருதரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒருவர், ‛‛இது பேராசை.. இத்தகைய நடவடிக்கையை தாங்கி கொள்ள முடியாது. மக்கள் தங்களின் சில பவுண்ட்டுகளை (பிரிட்டன் பணம்) மிச்சப்படுத்துவதை ஏற்க முடியவில்லை'' என்று கூறியுள்ளார்.

இன்னொருவர், ‛‛நல்ல ஆஃபரை மக்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். இதில் தவறு இல்லை'' என்று கூறியுள்ளார். இப்படி இந்த வீடியோவுக்கு, ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+