லண்டனில் அம்பு ஏவி இந்திய வம்சாவளி பெண் கொலை.. வயிற்றிலிருந்த சிசு தப்பிய அதிசயம்
லண்டன்: லண்டன் நகரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வில் அம்பு தாக்குதலால் பலியாகியுள்ளார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்திரமாக தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
கிழக்கு லண்டன் பகுதியில் திங்கள்கிழமை மாலையில், தேவி என்ற 35 வயது பெண் வில்லம்பு தாக்குதலால் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். எனவே உடனடியாக அறுவை சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப்பட்டது. அந்த குழந்தை உயிர் பிழைத்தாலும் கூட தேவி மரணம் அடைந்தார்.
[அக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு வைக்கல.. மருத்துவர்கள் அதிர்ச்சி]

முன்னாள் கணவர்
இதுதொடர்பாக, அம்பை ஏவியதாக, ராமனோட்ஜ், என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவராகும். "இது ஒரு சோகமான சம்பவம். எங்களது அனுதாபங்களை அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டாவது திருமணம்
லண்டனில் தேவி, சனா முஹம்மது என்று அறியப்பட்டார். ஏனெனில், 7 வருடங்கள் முன்பாக இம்தியாஸ் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு தேவி இஸ்லாமுக்கு மாறியுள்ளார். தேவிக்கும் ரமனோட்ஜ் ஆகியோருக்கும், 18, 14 மற்றும் 12 வயதுகளில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இம்தியாஸ் முகமதை திருமணம் செய்த பிறகு 5 மற்றும் 2 ஆகிய வயதுகளில் இரு பெண் குழந்தைகள் அந்த தம்பதிக்கு உள்ளனர். இப்போது நடைபெற்ற அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு, இப்ராஹிம் என்று இம்தியாஸ் முகமது பெயர் சூட்டியுள்ளார்.
|
நல்ல பெண்
இதுகுறித்து இம்தியாஸ் முகமது அந்த நாட்டு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், சனா ஒரு சிறப்பான தாய் மற்றும் மனைவியாக இருந்தார். ஏழு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். சனா இறந்த செய்தி இதயத்தை நொறுக்குவது போல உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

அதிசயமாக தப்பியது
ஏவப்பட்ட அம்பு, சனாவில், வயிற்றில் இருந்து இதயம் வரை பாய்ந்துள்ளது. ஆனால், குழந்தையின் மீது அந்த அம்பு படவில்லை. இன்னும் நான்கு வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டி இருந்த நிலையில், ஒன்பதாவது மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இப்போது குழந்தை நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications