For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்யூபேஜியாவால் பாதிக்கப்பட்ட பெண்.. தாலியையும் விட்டு வைக்கல.. மருத்துவர்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

அகமதாபாத்: தாலி, வளையல்கள், ஆணிகள் என ஒன்றரை கிலோ இரும்பு பொருட்களை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் வீதிகளில் சுற்றி திரிந்தார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

Jewellery, Nails removed from Gujarat ladys stomach

இவர் அங்கு இயங்கி வரும் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள மருத்துவர்கள் இந்த பெண்ணுக்கு வயிறு வலித்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அவரது வயிறும் கல் போன்று இருந்தது.

இதையடுத்து அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அதில் ஏராளமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

[லண்டனில் அம்பு ஏவி இந்திய வம்சாவளி பெண் கொலை.. வயிற்றிலிருந்த சிசு தப்பிய அதிசயம்]

அப்போது அவரது வயிற்றில் இருந்து தாலி, இரும்பு ஆணிகள், நட்டுகள், போல்டுகள், ஊக்குகள், கொண்டை ஊசிகள், ஹேர் பின்கள், பிரேஸ்லெட்கள், சங்கிலிகள், வளையல்கள் என அனைத்தையும் எடுத்தனர்.

சுமார் 2 மணி நேரம் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் ஒன்றரை கிலோ இரும்பு பொருட்கள் இருந்தது அகற்றப்பட்டது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் அக்யூபேஜியா என்ற ஒரு வகை அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்று இரும்பு பொருட்களை உண்பர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
A mangalsutra, bangles and iron nails, weighing around 1.5 kg in total, were removed from the stomach of a mentally-ill woman after surgery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X