அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்வியால் திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறவுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்டோர் முக்கிய பதவிகளில் இருக்க கூடாது என்று திமுக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் திமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் முடிவு செய்துள்ளாராம். பொதுச்செயலாளர் பதவியில் அடுத்து அமரப்போவது யார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக இரண்டாக பிரிந்து மீண்டும் இணைந்துவிட்டது. ஆனால் சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் தோல்வியடைந்தார்.

duraimurugan-duraimurugan-to-quit-politics-new-general-secretary-to-appoint-for-dmk

திமுகவில் அதிரடி மாற்றம்

தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி உடைந்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. திமுகவின் முக்கியமான பலங்களில் ஒன்றாக கூட்டணி கருதப்பட்டது. அந்த கூட்டணி உடைக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள ஆய்வின் அடிப்படையில் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "தமிழக அரசியல் விஜய் உதயநிதி என்கிற வகையில் மாறிவிட்டது. தவெக அமைச்சரவையில் உள்ள பலரும் இளைஞர்களாக உள்ளனர். அதனால் திமுகவிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

துரைமுருகன் பதவி விலகல்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. ஆட்சியில் இருந்தபோதே அவர் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் அவரின் செயல்பாடு குறைவாக இருந்தது. சட்டமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்து அவர் தேர்தலில் போட்டியிட்டார்.

காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தார். உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பதால் துரைமுருகன் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துவிட்டாராம். இதை துரைமுருகனே தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொல்லியுள்ளார். துரைமுருகன் பதவி விலகும் பட்சத்தில், திமுக பொருளாளராக உள்ள டி.ஆர். பாலு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+