வருது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. அண்ணா பிறந்தநாளில் அறிமுகம்.. அறிவித்தார் முதல்வர் விஜய்

Subscribe to Oneindia Tamil

கரூர்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் இன்று அறிவித்தார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

cm-vijay-announces-thaimaman-thanga-mothiram-scheme-will-be-starts-on-anna-birthday

இதுதொடர்பாக முதல்வர் விஜய் இன்று பேசியதாவது: ''பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி உள்ளோம். வரப்போகும் அறிஞர் அண்ணா பிறந்தநாளில் உங்கள் அண்ணன் அரசில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்படும். வாக்குறுதி கொடுத்தீங்களே என்று கேட்டாங்களே.. இந்த தீயசக்தி மாதிரி ரீல் தாய்மாமன் எல்லாம் கிடையாது. ரியல் தாய்மாமன்'' என்றார்.

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள செப்டம்பர் 15 ஆகும். இதனால்அன்றையதினம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. முன்னதாக, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு முதல்வர் விஜய் ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருந்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இப்போது அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக மீண்டும் இன்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+