கரூர் கம்பெனி ஓனர்! ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்.. செந்தில் பாலாஜியை கிண்டல் செய்த விஜய்
கரூர்: ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர் ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன் என்ற பாடலை பாடி செந்தில் பாலாஜியை விஜய் கிண்டல் செய்தார்.
கரூர் வெண்ணெய்மலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது ஏன் என்பதை விவரித்தார்.
இதையடுத்து அவர் பேசுகையில், என் வாழ்வில் அதிக வலி, காயம் கொடுத்தது கரூர் சம்பவம்தான்.. அரியலூரில் கூட்டத்தை முடித்துக் கொண்டு விட்டு பெரம்பலூருக்கு சென்ற போது கூட்டம் அதிகமாகிவிட்டது , திரும்பி போய்விடுங்கள் என போலீஸ் எச்சரித்தனர்.
ஆனால் நாமக்கல் முடித்துக் கொண்டு விட்டு கரூருக்கு சென்ற போதும் கரூர் போலீஸார் எங்களை அலர்ட் செய்திருந்தால் நாங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி திரும்பி போயிருந்திருப்போம் இல்லையா?

போலீஸே எங்களை கரூருக்கு கொண்டு வந்துவிட்டது போல் நடந்தது. இதெல்லாம் காரணம் யார் என்பது எனக்கு தெரியும். கரூரில் கூடிய கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததா?
இப்படியிருக்கும் போது வேதனையில் நான் வீட்டில் இருந்தால் ஓடி ஒளிந்துவிட்டேன் என்பதா? என்னிடம் வந்து ஜனமா, பணமா என கேட்டால் ஜனம்தான் முக்கியம் என்பேன். எனக்கு உங்களைவிட காசு பணம் எல்லாம் முக்கியம் கிடையாது.
நம் மக்கள் அமைத்துக் கொடுத்த அரசை குறைகளை டிசைன் டிசைனாக சொல்கிறார்கள். ஒவ்வொரு துறைகளிலும் அந்த பார்ட்டி ஃபண்ட்!
நான் ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் நாம் செய்த விஷயங்களை எல்லாம் சட்டசபையில் எடுத்து சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஒரு சில விஷயங்களை இங்க சொல்ல வேண்டும்.
மின்சார துறையில் போடாமல் இருந்த பதவி உயர்வுகளை போட்டுள்ளோம். ஊழலை ஒழிக்க முடியாதுனு சொன்னவங்க எல்லாம் ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் போய் பாருங்கள்.
அரசு அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கேட்பதில்லை. மனசு இருந்தால் எல்லாமே செய்யலாம். இப்போ செய்யலை! எல் அன்ட் டி நிறுவனத்துடன் 18,600 கோடிக்கு 3 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம்.
அந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் 8200 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குறுவை சாகுபடிக்காக 134 கோடியில் சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவித்திருக்கிறோம்.
வரும் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் திட்டம் தொடங்கப்படுகிறது. திமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தோம். அதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஓட்டை பாத்திரத்திற்குள்ள தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். பாத்திரமும் காலியாகவே இருந்திருக்கிறது, ஆனா ஊத்துன தண்ணீர்தான் எங்கே போனது என தெரியவில்லை.
வாயை திறங்க சிஎம் என சிம்எம்மை நெஞ்சில் குத்திக் கொண்டு வந்தது எல்லாம் வேற லெவல்! 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க! இதுக்கு மேல பேசினால் மொத்தமாக முடிந்துவிடும். மேகதாது அணை விவகாரத்தில் சீண்டிப்பார், தொட்டு பார் என பேசிகிட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது!
Talk less, work more இதுதான் என் பாலிசி! மக்களே இந்த தீயசக்தியும் தீய்ந்து போன சக்தியும் வேறு வேறு அல்ல, கூட்டு களவாணிகள்! எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லைனு அவர்களால் அறிவிக்க முடியுமா?
ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிகாரர் ஓடிவிட்டார். ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன் என்பது போல் அவர் ஓடிவிட்டார்.
இன்னொருவர் வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நான் ஸ்டாலின் சாரை சொல்லலை, சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சரை சொன்னேன். இவ்வாறு விஜய் பேசினார்.


Click it and Unblock the Notifications
