விஜய்யும் விடலையே! கோர்ட்.. கரூர்.. எல்லா இடத்திலும் தவெக குற்றஞ்சாட்டும் அந்த சிங்கப்பூர் நபர் யார்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று சிங்கப்பூருக்கு ஒருவர் ஓடி விட்டதாக குற்றஞ்சாட்டினார். நேற்று முதல்நாள் கோர்ட் விசாரணையின் போதும் தவெக அரசு இதே சிங்கப்பூர் நபர் மீது குற்றச்சாட்டு வைத்தது.
இன்று கரூரில் விஜய் பேசுகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அதிக வலியை தந்தது. எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் அந்த வலி மாறாது. வாழ்வின் மிகப்பெரிய வலி.. காவல்துறை நினைத்திருந்தால் கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.. கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்து காவல்துறை நாடகம் ஆடியது.
கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.. பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம்.

ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது.. திரும்பிய பக்கம் எல்லாம் கதறல்.. கதறல்.. கதறல்.. கட்சி நிதி என்றதுமே எடுத்தார்கள் பாருங்க ஓட்டம்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.. எந்தக் கட்சி என்று கூட நான் சொல்லவில்லை. எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் அவர்களின் செயல்பாடு உள்ளது.
சிங்கப்பூர் நபர்
ஸ்டாலின் சார் மீது எனக்கு தனிப்பாசம் இருக்கிறது. அவர் வெளிநாடு சென்று ஓடி ஒளியவில்லை. ஆனால் சிங்கப்பூரில் ஒருவர் ஒளிந்திருக்கிறார். நான் கரூர் வந்ததும் இன்னொரும் அதேபோல் ஓடிவிட்டார்.. நிற்காமல் ஓடு ஓடு வாரான் பாரு வேட்டைக்காரன் என்று கரூர் கம்பெனி ஓனர் ஓடிவிட்டார். இந்த விஜய்யை கண்டு திமுகவினர் அஞ்சி ஓடி ஒளிகிறார்கள், என்று விஜய் கூறி உள்ளார். அதாவது சிங்கப்பூரில் ஒருவர் ஒளிந்திருக்கிறார் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சிங்கப்பூருக்கு ஒருவர் ஓடி விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதேபோல் நேற்று முதல்நாள் கோர்ட் விசாரணையின் போதும் தவெக அரசு இதே சிங்கப்பூர் நபர் மீது குற்றச்சாட்டு வைத்தது.
தவெக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிற்கு ₹35 கோடி குதிரை பேர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி.
கோர்ட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கப்பூர் நபர்
அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இருவரின் பெயரும் FIRல் இல்லாத காரணத்தால் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யான், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு மிக முக்கியமான முதன்மைக் குற்றவாளி ஏற்கனவே போலீஸ் ரேடாரில் இருந்து தப்பி சிங்கிப்பூருக்கு ஓடிவிட்டதாகவும், அவர் அங்கிருந்தபடியே ஹவாலா பணம் வழங்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் ஆதாரங்களின் பலவீனம் மற்றும் புகாரில் 2 நாட்கள் தாமதம், ஆடியோ ரெக்கார்டிங் இல்லாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டியே செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
இதனால், தப்பியோடிய அந்த சிங்கப்பூர் நபரை உடனடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து ஆடியோ, வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினால் மட்டுமே வழக்கு அசைக்க முடியாத அளவுக்கு வலுவாகும் என்பதை முதல்வர் விஜய் உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாக, சிங்கப்பூருக்கு தப்பிய நபரை சர்வதேச போலீஸ் உதவியுடன் உடனடியாகக் கைது செய்து தமிழகம் கொண்டு வரவும், வழக்கின் டிஜிட்டல் ஆதாரங்களை மிக வலுவாக மாற்றவும் காவல் துறைக்கு முதல்வர் விஜய் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications