இடைத்தேர்தலில் திமுகவை வச்சு செய்யுங்க.. கரூர் போய்.. இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்!
சென்னை: தமிழ்நாட்டில் வரப்போற இடைத்தேர்தலில் மக்களே தீயசக்தி திமுகவை நல்லா வச்சு வெளுத்து விடுங்க.. நம்பிக்கையா இருங்க.. நல்லதே நடக்கும் என்று பேசி முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக அரசியல் வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக கரூரில் பதிவானது. தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பயணத்தின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, 41 அப்பாவி உயிர்கள் பறிபோயின.
இந்த கோர விபத்து நடந்து முடிந்து, அரசியல் களம் மாறி, தற்போது விஜய் தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக இன்று கரூர் மண்ணிற்கு கட்சி நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்தார்.
கரூர் மக்கள் முன்னிலையில் பேசிய விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அதில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அதிக வலியை தந்தது. எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் அந்த வலி மாறாது. வாழ்வின் மிகப்பெரிய வலி.. காவல்துறை நினைத்திருந்தால் கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.. கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்து காவல்துறை நாடகம் ஆடியது.

கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.. பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம்.
ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது.. திரும்பிய பக்கம் எல்லாம் கதறல்.. கதறல்.. கதறல்.. கட்சி நிதி என்றதுமே எடுத்தார்கள் பாருங்க ஓட்டம்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.. எந்தக் கட்சி என்று கூட நான் சொல்லவில்லை. எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் அவர்களின் செயல்பாடு உள்ளது.
இன்னும் சில நாட்களில் விஜய் அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்.. வாய தொறங்க சிஎம் என்கிறார்கள்.. ஆனால் வாயை திறந்தால் ஓடிவிடுகிறார்கள்.. 5 நிமிடம் பேசினாலே கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளது.. திமுக, அதிமுக இரண்டும் கூட்டுக் களவாணிகள்.. எனது மனதை விட்டு கரூர் நீங்கவே நீங்காது.. தவெகவுக்கு எதிராக நடந்த சூழ்ச்சியை வரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதனால் கரூரில் தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்
மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள்; தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை; சட்டப்பேரவையில் பார்ட்டி பண்ட் என கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம்; குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.
ஸ்டாலின் சார் மீது எனக்கு தனிப்பாசம் இருக்கிறது. அவர் வெளிநாடு சென்று ஓடி ஒளியவில்லை. ஆனால் சிங்கப்பூரில் ஒருவர் ஒளிந்திருக்கிறார். நான் கரூர் வந்ததும் ஒருவர் ஓடிவிட்டார்.. இந்த விஜய்யை கண்டு திமுகவினர் அஞ்சி ஓடி ஒளிகிறார்கள்.
மக்களை காக்க வச்சு அரசியல் ஆதாயம் தேடுற அரசியல்வாதி நான் கிடையாது; மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்; நமக்கு இவ்வளவு வலியும் காயங்களும் கொடுத்தவங்களுக்கு, 2026-ல் நீங்க தக்க பதிலடி கொடுத்துட்டீங்க; ஆனா அது மட்டும் பத்தாது; காலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கணும்.
வரபோற இடைத்தேர்தலில் மக்களே இந்த தீயசக்தி திமுகவை நல்லா வச்சு வெளுத்து விடுங்க.. நம்பிக்கையா இருங்க.. நல்லதே நடக்கும்! என்று விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி கோபமாக பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications