ரூ8.39 கோடிக்காக கோர்ட்டுக்கு போன சுதா கொங்காரா.. பராசக்தி சம்பள பிரச்சனைக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் சுதா கொங்காரா - பராசக்தி சம்பளப் பிரச்சனை கடந்த வாரத்தில் பெரிதாக பேசப்பட்டது. தயாரிப்பு தரப்பில் தனக்கு பல கோடி சம்பள பாக்கி இருப்பதாகவும் சுதா கொங்காரா வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய அதிரடி உத்தரவு கொடுத்து இருக்கிறது.

சம்பள பிரச்சனை

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்தை இயக்கிய சுதா கங்காராவுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் 8. 39 கோடி இன்னும் பாக்கி உள்ளது என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த படத்தின் சேட்டிலைட் உரிமம் தொடர்பாகவும் அதே தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கும் இதயம் முரளி படத்தின் வெளியீட்டுக்கும் தடை கோரி அவர் மனு தாக்கல் செய்தது சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது.

Sudha Kongara Sivakarthikeyan Parasakthi

சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கு

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சுதா கொங்காரா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சம்பளப்பாக்கி பிரச்சனையை தயாரிப்பாளர் தரப்புடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறி இருக்கிறது. இதனால் நீதிமன்றத்தின் மூலம் உடனடியாக சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்த அவருக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டு

சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவில் பராசக்தி படத்திற்காக ரூபாய் 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 17.70 கோடி வழங்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 9.31 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் இன்னும் 8.39 கோடி பாக்கி இருப்பதாகவும் கூறி இருந்தார். அது மட்டும் இல்லாமல் படத்தின் உரிமைகள் அனைத்தையும் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்படைத்த பிறகும் சம்பளம் மட்டும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த சம்பவம் இன்னொரு முக்கியமான கேள்விகளையும் எழுப்பி உள்ளது. சமீப காலமாக படம் வெற்றி பெற்றதாக பெரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. வசூல் சாதனைகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அந்த படத்தை உருவாக்கிய இயக்குனர், எழுத்தாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவருக்கு ஒப்பந்தத்தின் படி முழு சம்பளமும் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.

சுதா கொங்கரா வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் இனி தயாரிப்பு நிறுவனமும் சுதா கொங்கராவும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பார்களா என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+