"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல்
பெங்களூர்: நடப்பு ஐபிஎல் தொடரில் பைனல்ஸில் குஜராத்தை வீழ்த்தி, ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்திய பெங்களூர், இறுதிப் போட்டியிலும் தனது முத்திரையைப் பதித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்குப் பிறகு 3வது அணியாக ஒரு கலக்கல் சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் சுமார் 17 ஆண்டுகள் கோப்பையை வெல்லாமல் இருந்த ஆர்சிபி அணி கடந்த சீசனில் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த சீசனிலும் அந்த முமெண்ட்டத்தை தொடர்ந்த ஆர்சிபி, நடப்பு 2026 சீசனின் இறுதிப் போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது!

ஐபிஎல்
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கேப்டன்களான எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா என்ற இருபெரும் ஜாம்பவான்களின் வரிசையில், தற்போது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரும் இணைந்து சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் 19 ஆண்டுக்கால வரலாற்றில், ஆர்சிபிக்கு முன்னதாக இந்த இமாலயச் சாதனையை வெறும் இரண்டு அணிகள் மட்டுமே செய்திருந்தன.
சிஎஸ்கே
முதல் இரு ஆண்டுகள் கோப்பையை தவறவிட்ட சிஎஸ்கே, 2010ல் சாம்பியன் பட்டம் வென்றது. முந்தைய இரண்டு சீசன்களில் கோப்பையைத் தவறவிட்ட சிஎஸ்கே, 2010ல் தனது முதல் கோப்பையை வென்றது. நவி மும்பையில் நடந்த ஃபைனலில், மும்பை இந்தியன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தனது முதல் ஐபிஎல் மகுடத்தைச் சூடினார். சுரேஷ் ரெய்னாவின் அதிரடி மற்றும் தோனியின் கேப்டன்சி இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
அடுத்த ஆண்டே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், கிறிஸ் கெயில் அச்சுறுத்தலோடு களம் கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சிஎஸ்கே எதிர்கொண்டது. முரளி விஜய்யின் 95 ரன்கள் காரணமாக ஆர்சிபி-யை 58 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாகத் தங்களின் சாம்பியன்ஷிப்பை தற்காத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையைச் சென்னை படைத்தது.
மும்பை
அதன்படி பிறகு பல சீசன்களாக எந்தவொரு அணியும் பேக் டூ பேக் கோப்பையை வெல்லாமல் இருந்தது. அதை மும்பை மாற்றி அமைந்தது. ஐபிஎல் வரலாற்றின் மிகப் பரபரப்பான இறுதிப் போட்டிகளில் ஒன்று இதுதான். ஹைதராபாத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடந்த ஃபைனலில், கடைசி பந்தில் லசித் மலிங்கா வீசிய ஸ்லோ-யார்க்கர் மூலம் சென்னை அணியை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை த்ரில்லர் வெற்றி பெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்தில் இந்த சீசன் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அசுரத்தனமான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எவ்வித பிரஷருமின்றி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தி, தோனிக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா.
குஜராத்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 2022ல் தனது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று மாஸ் காட்டியது. அடுத்த ஆண்டே (2023) மீண்டும் ஃபைனலுக்குள் நுழைந்து இந்த 'பேக்-டு-பேக்' சாதனைக்கு அருகில் சென்றது. ஆனால், அந்த ஃபைனலின் கடைசி 2 பந்துகளில் ரவீந்திர ஜடேஜா அடித்த சிக்ஸர் மற்றும் பவுண்டரியால் குஜராத் அணி நூலிழையில் கோப்பையைத் தோனியிடம் பறிகொடுத்தது.
பெங்களூர்
பல ஆண்டுகளாக "ஈசாலா கப் நம்தே" என்ற ஏமாற்றத்தோடு இருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு, கடந்த சீசனின் சாம்பியன் பட்டம் ஒரு மெகா கொண்டாட்டமாக அமைந்தது. ஆனால், அந்த வெற்றியோடு திருப்தி அடையாமல் 2026 கலக்கி இருக்கிறது ஆர்சிபி. விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர், க்ருனால் பாண்டியா எனப் பல ஸ்டார்களை உள்ளடக்கிய இந்த சாம்பியன் அணியை, கேப்டனாக முன்னின்று வழிநடத்திய ரஜத் படிதார் தான் இந்த வரலாற்றுச் சாதனைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications