வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதேபோன்று நள்ளிரவு ஒரு மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேர மழை அப்டேட்டினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
நள்ளிரவு 1 மணி வரை தமிழகத்தின், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதே போன்று கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்
02-06-2026 மற்றும் 03-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
04-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை கிளைமேட் எப்படி?
சென்னையில் நாளை திங்கட்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என வானிலை மையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications