தவெகவில் இணைந்த 1 மாதம் கழித்து.. அப்பா ஜெகத்ரட்சகனுக்கு கால் செய்த மகன்! சொன்ன ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மகன் சந்தீப் ஆனந்த் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். இதையயடுத்து கடந்த 1 மாதமாக அப்பாவிடம் பேசாமல் இருந்த சந்தீப், கடந்த வாரம் நீண்ட நேரம் அவரிடம் பேசியிருக்கிறார். இதில் பல முக்கியமான விஷயங்களை அவர் தனது அப்பாவிடம் பகிர்ந்து கொண்டாராம்.

திமுகவின் அட்சயப்பாத்திரங்களில் ஒருவரான ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மகன் சந்தீப் ஆனந்த், சமீபத்தில் தவெகவில் இணைந்திரு க்கிறார். இந்த இணைப்புத்தான் திமுகவில் பல கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வே, தனது மகன் சந்தீப்பிற்கு திமுகவில் பதவி வாங்கித்தர முயற்சி த்தார் ஜெகத் ! துரைமுருகனும் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், திமுக தலைமை இதனை அலட்சியப் படுத்தியது. இதில் ஜெகத்துக்கு வருத்தம் தான்.

Jagathrakshakan

நெருங்கிய நட்பை வைத்திருந்த சந்தீப் ஆனந்த்,

இந்த நிலையில், தவெக தரப்பில் முன்னணி தலைவர்களுடன் நெருங்கிய நட்பை வைத்திருந்த சந்தீப் ஆனந்த், தேர்தலுக்கு முன்பாகவே தவெகவில் இணைய முடிவெடுத்தார். இதைப்பற்றி தந்தை ஜெகத்திடம் அவர் சொன்னபோது, தவெகவில் இணைவதை தடுத்தார். தலைவர் (ஸ்டாலின்) கோபித்துக் கொள்வார் ; கொஞ்சம் பொறுமையாக இரு என்று அட்வைஸ் செய்து சந்தீப்பின் அரசியலுக்கு தடை போட்டார் ஜெகத் !

அப்பா வின் சொல்படி அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடாது

தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிராக வந்த நிலையில், இனி அப்பா வின் சொல்படி அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடாது என்று கருதிய சந்தீப் ஆனந்த், தவெகவில் சேரும் முடிவை எடுத்தார். அதன்படி அக்கட்சியில் இணைந்துள்ளார் அவர். இந்த முடிவை ஜெகத்திடம் சொல்லவில்லை. ஜெகத்திடம் ஆலோசிக்காமலே தவெகவில் இணைந்தார் சந்திப் ஆனந்த்.

அவர் அரசியலை அவரே முடிவு செய்து விட்டார்

தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அவரது (மகன்) அரசியலை அவரே முடிவு செய்து விட்டார் . இதில் நான் என்ன சொல்வது? என தம்மை சந்திப்பவர்களிடம் இப்போதும் சொல்லி வருகிறார் ஜெகத் ரட்சகன். திமுக தலைமைக்கும் அப்போதே தகவலை பாஸ் செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 1 மாதமாக அப்பாவிடம் பேசாமல் இருந்த சந்தீப், கடந்த வாரம் நீண்ட நேரம் அவரிடம் பேசியிருக்கிறார். அப்போது, ''பாண்டிச்சேரியில் தவெகவுக்கென ஆளுமை மிக்க தலைவர்கள் யாருமில்லை. பாண்டிச்சேரி அரசியலையும் கவனித்து வந்த புஸ்சி ஆனந்த்,

புஸ்ஸியால் தவெகவை கவனிக்க முடியவில்லை

தற்போது தமிழக அமைச்சராகி விட்டதால், தமிழகத்தை கடந்து அவரால் தவெகவை கவனிக்க முடியவில்லை. அதனால் பாண்டிச்சேரி தவெகவை கவனித்துக்கொள்ள சமூக ரீதியாகவும் பணப்பலத்திலும் ஸ்ட்ராங்கா இருக்கும் ஒருவர் தவெகவுக்கு தேவைப்படுது. நீங்கள் தவெகவுக்கு வருகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். தவெகவின் முக்கியஸ்தர்கள் தன்னிடம் கேட்டதா கவும் ஜெகத்திடம் விவரித்திருக்கிறார் சந்தீப் ஆனந்த் !

எதுவுமே சொல்லாத அப்பா

ஆனால், மகன் கேட்டதற்கு எஸ் என்றும் சொல்லவில்லை ; நோ என்றும் சொல்லவில்லையாம் ஜெகத். அதேசமயம், திமுகவில் நான் வருத்தமாகத்தான் இருக்கிறேன். பார்ப்போம்... வெயிட் பண்ணு என்று மட்டும் மகனிடம் சொல்லியுள்ளாராம் ஜெகத்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+