தேர்தல் ஆணையர் பற்றி.. நாடே பேசுது! நீங்க பேசாதது ஏன்? பாஜக எனில் பயமா? - விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையர் பற்றி முதலமைச்சர் விஜய் பேச தயங்குவது ஏன்? பாஜக என்றால் பயமா? என கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "பிரச்சார மேடையில் மைக் கிடைத்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டு.. மனப்பாடம் செய்த டயலாக்குகளை கத்த வேண்டியது. பேசுவதே கிடையாது.. சட்டமன்றமாக இருந்தாலும் சரி, தெருவாக இருந்தாலும் சரி, கத்துவது தான்.

Stalin Asks Vijay

ஆனால் மீடியா மைக்கை பார்த்தால் மட்டும் அவருக்கு அலர்ஜி. மேடையிலும் சட்டமன்றத்திலும் கத்துகிறீர்களே! மீடியா மைக்கை பார்த்து கொஞ்சம் பொறுமையாகவாவது பேசலாமே! மேட்டூரில் முதலமைச்சர் விஜய் சந்தித்த பாட்டி, காலை உணவு திட்டத்தில் முதலமைச்சர் உடன் அமர்ந்து சாப்பிட்ட சிறுமியும் கூட.. மீடியாவுக்கு தைரியமாக பேட்டி கொடுத்தார்கள். கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால், இந்த ரீல்ஸ் சிஎம் மட்டும் மீடியாவை கண்டு பயப்படுகிறார்.

இந்த லட்சணத்தில் என்னை பார்த்து.. வாய் திறங்க ஸ்டாலின் சார் என்று காட்டு கத்து கத்துகிறார். நானும் கத்துகிறேன்! சிஎம் சார்.. ப்ரோ.. நான் எல்லாவற்றுக்கும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேசாமல் இருக்கிறீர்கள்? இதை நான் கேட்கவில்லை.. உங்களுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே கேட்கிறார்கள்! சிஎம் சார் என்ன பயம்? இந்தியா முழுக்க.. எல்லா தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தில் கூட உங்களால் வாயை திறக்க முடியவில்லை எனில்.. என்ன காரணம் சார்? பாஜக என்றால் அவ்வளவு பயமா சிஎம் சார்?

தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது.. அவர் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். பாஜகவின் கிளை தான் தமிழக வெற்றிக்கழகம் என்று சொன்னார். அது உண்மைதான். மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டிய சட்டமன்றத்தின் மாண்புகளை இவர் கெடுத்து விட்டார். கண்ட கண்ட சைகைகளை எல்லாம் காட்டி.. நான் மிசா காலக்கட்டத்தில் சந்தித்த கொடுமைகள் எல்லாம் கிண்டல் செய்யும் இடமாக சட்டமன்றத்தை மாற்றிவிட்டார். மக்கள் உங்களைப் பார்த்து.. மாண்புமிகு என்று அழைக்கும் தராதரத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்களை பார்த்து சீப் மினிஸ்டர் என்று சொல்ல வேண்டும் சீப்பான மினிஸ்டர் என்று சொல்லிவிடக்கூடாது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+