சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட சத்தியபாமாவை பல்டிபாமா என்கிறார்கள் மக்கள்.. சாடிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்டதால் சத்தியபாமாவை மக்கள் பெட்டிபாமா, பல்டிபாமா என்று அழைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். படத்திற்கு ஜனநாயகன் என்று பெயர் வைத்த விஜய், இடைத்தேர்தலை உருவாக்கி இப்போது ஜனநாயகத்திற்கு வில்லனாக மாறியுள்ளதாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் சுகன்யாவுடன் தாராபுரத்தில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது மளிகை கடைகளுக்கு சென்று விலைவாசி உயர்வு குறித்து கேட்டறிந்தார்.

Stalin

அதேபோல் மக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தற்போது தாராபுரத்தில் பிரச்சாரம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டின் விதைக்களஞ்சியம் தாராபுரம். நான் இங்கு வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை.. நியாயம் கேட்டு வந்துள்ளேன். ஒருவரிடம் பெட்டி பெட்டியாக பணத்தை திணித்த காரணத்தால், மக்கள் மீது இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறது. பெட்டியை கொடுத்தது யார்?

பெட்டியை வாங்கியது யார்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் கட்டின வரிப் பணத்தால் தான் இடைத்தேர்தல் நடக்கப் போகிறது. 5 மாதங்களுக்கு முன் நீங்கள் போட்ட ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றிவிட்டார்கள். அந்த துரோகிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு ரெடியா? துரோகத்தை முறியடிப்பது மட்டுமல்லாமல், விலை போகாத ஒருவரை உங்களுக்கு விஸ்வாசமானவரை வெற்றி பெற வைக்கவும் உங்களை நாடி வந்துள்ளேன்.

திமுக வேட்பாளர் சுகன்யாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். துடிப்பான வழக்கறிஞர் என்பதால், சட்டசபையில் மக்களுக்காக நன்றாக வாதாடுவார். எல்லாவற்றுக்கும் மேல் உங்களின் வாக்குகளை வேறு கட்சியிடம் சென்று விற்க மாட்டார். தேர்தல் முடிந்து 5 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்கு இந்த இடைத்தேர்தல்.. இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை பெட்டிபாமா, பல்டிபாமா என்று மக்கள் அழைக்கின்றனர். அதேபோல் படத்திற்கு ஜனநாயகன் என்று பெயர் வைத்த முதல்வர், குதிரை பேரம் பேசி இடைத்தேர்தலை உருவாக்கி இப்ப ஜனநாயகத்திற்கு வில்லனாக மாறி இருக்கிறார். ஆணவத்தின் உச்சத்தில் மக்களின் வாக்குரிமையை கொச்சைப்படுத்தும் முதல்வர் விஜய்க்கு தாராபுரம் மக்கள் கொடுக்கும் அடி, பாடமாக மரண அடியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+