'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 25 பந்துகளில் அரைசதம் விளாசி விராட் கோலி அசத்தியுள்ளார். எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போதும், விராட் கோலி கொஞ்சம் கூட அசராமல் இந்த சீசனில் அவரின் அதிவேக அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ஆர்சிபி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களை சேர்ந்தார். அர்சிபி அணிக்காக ரஷிக் சலாம் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'பிரின்ஸ்' சுப்மன் கில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் எளிய இலக்கை நோக்கி ஆர்சிபி அணியின் வெங்கடேஷ் ஐயர் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த படிக்கல் 1, பட்டிதார் 15, க்ருணால் பாண்டியா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆட்டத்தில் குஜராத் அணியின் கைகள் ஓங்குவது போல் தெரிந்தது. ஆனால் மறுமுனையில் நின்றிருந்த விராட் கோலி கொஞ்சம் கூட தடுமாறாமல் களத்தில் விளாசி தள்ளினார். அதிலும் ஃபிளிக் ஷாட் மூலமாக ரபாடா பந்தில் சிக்ஸ் அடித்தது ரசிகர்களிடையே வியப்பை அளித்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் அதிவேக அரைசதமாக இது அமைந்தது. இதன் மூலமாக விராட் கோலி மீண்டும் தாம் ஒரு சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார். குறிப்பாக மிக முக்கியமான போட்டியான ஐபிஎல் பைனலில் விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதேபோல் சுப்மன் கில் மீதும் விமர்சனத்தை அதிகரித்துள்ளது. ஏனென்றால் மிக முக்கியமான போட்டிகளில் விராட் கோலியை போல் அல்லாமல் சுப்மன் கில் சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனால் அடுத்த விராட் கோலி என்று சுப்மன் கில் காட்டிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications