முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்
சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்று பல நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முதல்வரை சந்திக்காமல் இருப்பது, மாநகராட்சி நிர்வாகம்-மாநில அரசு நிர்வாகத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்து துணை மேயர் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
தினமணி செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கும் துணை மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மு.மகேஷ்குமார், தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

என்ன பஞ்சாயத்து?
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என அனைத்து பொறுப்பிலும் திமுகவினர் இருக்கினற்னர். மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுகதான் வெற்றி பெற்றிருந்தது.
எனவே இன்று வரை முதலமைச்சர் விஜய் மேயர், துணை மேயர் என யாரும் சென்று சந்திக்கவில்லை. நிர்வாக ரீதியில் பார்த்தால் நகராட்சி நிர்வாகத்துறை முதல்வர் வசம்தான் இருக்கிறது. ஆனால் நிர்வாக பொறுப்பில் இருக்கும் மேயர் உள்ளிட்டோர் விஜய்யை சந்திக்கவில்லை. இதனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாநில அரசு நிர்வாகத்திற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
துணை மேயர் சொல்வது என்ன?
இப்படி இருக்கையில்தான் இந்த விவகாரம் குறித்த துணை மேயர் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஏன் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மேயர் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
"முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கும், அதன்பின்னர் இரண்டு முறை நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்கும் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. அவசரம் காரணமாக அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் அதே நிலை தொடர்ந்தது," என்றார் அவர்.
முதல்வரை சந்திப்பது பற்றி
மேலும், "அரசுத் தரப்பிலேயே மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பது போல் செயல்பட்டு வரும் நிலையில், முதல்வருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்புவது நியாயமானதல்ல," என்று மு. மகேஷ்குமார் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, அதிமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டது சுட்டிக்காட்டப்பட்டபோது, "அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய மேயரான மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதால்தான் அவர் பங்கேற்றார்," என்று மகேஷ்குமார் தெளிவுபடுத்தினார்.
மரபு சார்ந்ததுதான்
நகராட்சி நிர்வாகத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், துறையின் தலைவராக அவரை சந்தித்திருக்கலாமே என்ற கேள்விக்கு, "முதல்வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சந்திக்க சட்ட விதிமுறை ஏதுமில்லை. சந்திப்பது மரபு சார்ந்ததுதான்," என்று அவர் பதிலளித்தார்.
மேலும், "பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை அரசே புறக்கணிக்கும் சூழலில், நாங்களாக வலியச் சென்று சந்திப்பது என்பது சாத்தியமற்றது," என்று மு. மகேஷ்குமார் கூறினார். மாநில அரசுக்கும், உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் இடையே இத்தகைய முரண்பாடு, மக்கள் நலத்திட்டங்களைப் பாதிக்காதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
முழு ஒத்துழைப்பு
அதற்கு, "அரசின் திட்டங்களை சென்னை மாநகராட்சியில் நிறைவேற்ற தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம். நிர்வாகச் செயல்பாடுகளை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக ஒருபோதும் தடையாக இருக்காது," என்று மகேஷ்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications