திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழிற்துறையின் சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து இந்த 2 நகரங்களிலும் அடுத்தடுத்து புதிய ஐடி பூங்காக்கள் திறக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்பொழுது சர்வதேசத் தரம் வாய்ந்த சொகுசு நட்சத்திர ஹோட்டல்களும் (Star Hotels) கோவையிலும் திருச்சியிலும் வர துவங்கியுள்ளன.
வணிக ரீதியில் இது மாபெரும் நகர்வாக பார்க்கப்படுகிறது, தமிழ்நாட்டின் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் (Commercial Real Estate) துறையில் இது முக்கிய திருப்பு முனையாகவும் அமைகிறது. ஐடி பார்க், மால், வணிக வளாகங்கள் வரிசையில் தற்போது ஆடம்பர ஹோட்டல்கள் வர துவங்கியுள்ளது ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறைக்கு பலமாக அமைந்துள்ளது.

திருச்சியில் 3 சர்வதேச மெகா ஹோட்டல்கள்
திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து மற்றும் தொழில்துறை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகளவில் புகழ்பெற்ற மூன்று பன்னாட்டு பிராண்டட் ஹோட்டல் குழுமங்கள் (International Branded Hotel Chains) தங்களின் பிரம்மாண்டமான ஹோட்டல்களைத் திருச்சியில் தற்பொழுது வேகமாகக் கட்டி வருகின்றன.
முதலாவதாக, இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஐஹெச்சிஎல் குரூப் (IHCL Group - Taj Hotels), திருச்சி டிவி கோவில் பைபாஸ் (TV Koil Bye Pass) பகுதிக்கு அருகே தனது புதிய சொகுசு ஹோட்டலை அமைத்து வருகிறது.
இந்த ஹோட்டல் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 11 அடுக்கு மாடிகளைக் கொண்டு (B+G+11 Floors), அதன் மொட்டை மாடியில் ஒரு பிரம்மாண்ட நீச்சல் குளத்துடன் (Rooftop Swimming Pool) மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவதாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்' (Four Points by Sheraton) ஹோட்டல் குழுமம், திருச்சி ரயில் நிலைய சந்திப்பிற்கு (TPJ Junction) நேர் எதிரே தனது மெகா ஹோட்டல் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த ஹோட்டல் அடித்தளம், தரைத்தளம், மெஸ்ஸானைன் தளம் மற்றும் 8 அடுக்கு மாடிகளுடன் (B+G+M+8 Floors) மொட்டை மாடி நீச்சல் குள வசதியுடன் அமையவுள்ளது.
மூன்றாவதாக, இந்தியாவின் மற்றுமொரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான ஐடிசி-யின் 'ஐடிசி ஃபார்ச்சூன்' (ITC Fortune) ஹோட்டல் குழுமம், திருச்சியின் முக்கியப் பகுதியான டிவிஎஸ் டோல்கேட் (TVS Tolgate) சந்திப்பில் தனது புதிய ஹோட்டலை நிறுவி வருகிறது. இது இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 அடுக்கு மாடிகளுடன் (2B+G+7 Floors) கூரை மேல் நீச்சல் குள வசதியைக் கொண்டிருக்கவுள்ளது.
கோயம்புத்தூருக்கு சவால் விடும் திருச்சி
தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை பகுதியான கோயம்புத்தூரை, மத்திய மண்டலத்தின் நுழைவாயிலான திருச்சி மாநகரம் சொகுசு ஹோட்டல் அறைகளின் (Branded Keys) எண்ணிக்கையில் முந்திவிடுமா என்ற புதிய விவாதம் தற்பொழுது கார்ப்பரேட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதுவும் வளர்ச்சியின் ஒரு அளவு கோலாகவும் விளங்குகிறது.
திருச்சியில் ஒரே நேரத்தில் இத்தனை முன்னணி பிராண்டட் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுமானத்தில் இருப்பது திருச்சி மாநகரம் அடைந்து வரும் பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சியைப் காட்டுகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாகப் பன்னாட்டுத் தொழிலதிபர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கார்ப்பரேட் வல்லுநர்களை ஈர்ப்பதில் திருச்சியும் கோவையும் முன்னணியில் உள்ளது.
வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும்
ஐடி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்த நட்சத்திர ஹோட்டல்களின் வரவானது திருச்சியின் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் மதிப்பை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.
சொகுசு ஹோட்டல்கள் அமையவுள்ள டிவி கோவில் பைபாஸ், ரயில்வே ஜங்ஷன் மற்றும் டிவிஎஸ் டோல்கேட் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள நிலங்களின் விலைகள் தற்பொழுது பன்மடங்கு எகிறத் தொடங்கியுள்ளன.
மிக முக்கியமாக, இந்த சர்வதேச ஹோட்டல்களின் வருகையால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களும் பல வகையில் வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications