வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் என வந்துவிட்டாலே பலரும் பதற்றத்தில் சொதப்பி விடுவார்கள். ஆனால், வெங்கடேஷ் ஐயர் அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் ப்ளே ஆப் சுற்றில் எக்ஸ்ட்ரா பவருடன் ஆடி வேற லெவலில் கலக்குவதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஒருவர் சீசன் முழுக்க சிறப்பாக விளையாடுவது எவ்வளவு முக்கியமோ.. அதை விட முக்கியம் நாக்அவுட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பைக் கொடுப்பது. சீசன் முழுக்க சிறப்பாக விளையாடும் பல வீரர்கள் நாக்அவுட் போட்டிகளில் சொதப்புவது உண்டு.. இதற்கு நாம் பல உதாரணங்களைப் பார்த்து இருப்போம்.

IPL Final RCB Venkatesh Iyer Proves Playoff Specialis

வெங்கடேஷ் ஐயர்

ஆனால் வெங்கடேஷ் ஐயர் அப்படி இல்லை.. ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான, அழுத்தங்கள் நிறைந்த பிளே-ஆஃப் போட்டிகள் வந்துவிட்டாலே, எதிரணியின் வியூகங்களை முறியடித்து ரன் குவிக்கும் ஒரு தனித்துவமான பிளேயராக வெங்கடேஷ் ஐயர் திகழ்ந்து வருகிறார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த போதும் சரி, இப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருக்கும்போதும் சரி, நாக்-அவுட் போட்டிகளில் இவர் எப்போதுமே கலக்குவார்.

கலக்கல்

2021 ஐபிஎல் தொடரின் அமீரகத்தில் நடந்தபோது, கேகேஆர் அணியின் பேட்டிங் பலத்தையே தனது ஒற்றைத் தோள்களில் சுமந்த வெங்கடேஷ் ஐயர், அழுத்தமான நாக்-அவுட் ஆட்டங்களிலும் அதே மொமெண்டத்தைத் தொடர்ந்தார்.. அந்தத் தொடரில் 10 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும் 41 சராசரியுடன் 370 ரன்களை குவித்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வாலிஃபையர் 2 போட்டியில் ஷார்ஜாவின் மிகக் கடினமான இலக்கைத் துரத்திய போது, ஓப்பனராக களம் இறங்கி 41 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். மேலும், 'ஆட்டநாயகன்' விருதை வென்றதுடன் அணியை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றார். சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கேகேஆர் தோற்றிருந்தாலும், சிஎஸ்கேவின் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது, ஒற்றை ஆளாகச் சென்னை பந்துவீச்சைத் துவம்சம் செய்து 32 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். மேலும், சுப்மன் கில்லுடன் இணைந்து 91 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மாஸ் காட்டினார்.

பவர்ஃபுல் ஃபினிஷர்

கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி தங்களின் 3வது கோப்பையைத் தூக்குவதற்கு வெங்கடேஷ் ஐயர் ஒரு பவர்ஃபுல் ஃபினிஷராக உருவெடுத்தார். அந்த சீசன் முழுவதும் 158.80 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் 370 ரன்கள் குவித்து அசத்தினார்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் எவ்வித பிரஷருமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்தார். கேகேஆர் சாம்பியன் பட்டம் வெல்ல அது முக்கியமான ஒரு காரணமாக இருந்தது.

நடப்பு 2026 சீசனில் சாம்பியன் ஆர்சிபி அணிக்கு மாறிய பின்னரும், பிளே-ஆஃப் போட்டிகளின் ஸ்பெஷலிஸ்ட் என்ற தனது பார்மை தொடர்ந்து வருகிறார்.. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் 7 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 271.43ஆகும். இன்று நடந்த இறுதி போட்டியிலும் அவர் தனது பார்மை தொடர்ந்தார்.

முதுகெலும்பை உடைத்தார்

குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை நோக்கி, விராட் கோலியுடன் இணைந்து அக்ரோஷமாக களம் இறங்கினார். ரபாடாவின் அச்சுறுத்தும் பந்துவீச்சை அசால்ட்டாக எதிர்கொண்டு, வெறும் 16 பந்துகளில் 32 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 200) குவித்தார். குஜராத்தின் பௌலிங் முதுகெலும்பை ஆரம்பத்திலேயே உடைத்தார். இந்த அதிரடித் தொடக்கம், ஆர்சிபி அணிக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக மாறியிருக்கிறது.

நாக்-அவுட் என வந்தாலே அசுர வேகம் என்பதே வெங்டேஷ் ஐயரின் பார்முலாவாக இருக்கிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கினாலும் சரி, மிடில் ஆர்டரில் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் சரி, அழுத்தங்கள் நிறைந்த பிளே-ஆஃப் போட்டிகளில் வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆவரேஜ் மற்றும் ஸ்டிரைக் ரேட் எப்போதும் தனித்துத் தெரியும்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+