வரும் மாதங்களில் குறையும்.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1சதவீதமாக இருக்கும்.. ஐஎம்எப் கணிப்பு
லண்டன்: ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் (IMF) 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதம் ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. கடந்த 2022 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 6.1 சதவீதமாக குறையும் என்று ஐஎம்எப் கணித்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடன் வழங்கும் நிறுவனம் தான் ஐஎம்எப். அதாவது சர்வதே நாணய நிதியம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இந்த ஐஎம்எப் அடிக்கடி பல்வேறு நாடுகளை ஆய்வு செய்து பொருளாரா நிலைகள் குறித்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டது. உள்நாட்டு உற்பத்தி எந்த நாடுகளில் எப்படி இருக்கிறது. வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. இதன் அடிப்படையிலேயே கடன்கள் வழங்குவதையும் அந்நிறுவனம் செய்து வருகிறது.பல்வேறு நாடுகளும் ஐஎம்எப்பின் ஆய்வை உன்னிப்பாக கவனிக்கும்.
அந்த வகையில் புதிய ஆய்வின் முடிவினை ஐஎம்எப் வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆண்டில் உலகத்தின் வளர்ச்சி சற்று மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதற்கு முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பல அதிரடியான (சிக்கன) பொருளாதார நடவடிக்கைகள் காரணம் என்று கூறியுள்ளது. எனினும் இனிவரும் காலங்களில் பல்வேறு சவால்கள் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஐபிஎப் கணிப்பின் படி 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் ஜிடிபி வளர்ச்சி 3.0% என்று கணித்துள்ளது. ஏப்ரல் மாதம் அறிவித்ததை விட 0.2 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. எனினும் 2024ம் ஆண்டில் 3.0% என்ற அளவிலேயே இருக்கும் என்றும் கணித்துள்ளது
இந்தியா குறித்து ஐஎம்எப் கணிப்புகளை பார்க்கும் போது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதம் ஆக இருக்கும் என்று கூறியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் கணித்ததை விட 0.2 சதவீதம் அதிகமாகும். 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சி இந்தியாவில் இருந்தது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதை விட குறைவாக, அதாவது 6.1 சதவீதம் என்று இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஐஎம்எப் கணித்துள்ளது. வரும் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 2022ல் இந்தியாவின் வளர்ச்சி 7.2% ஆக இருந்தது. தற்போது 6.1 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்தியாவை பற்றி மட்டுமல்ல.. அமெரிக்கா குறித்தும் ஐஎம்எப் கணித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட 0.2 சதவீத அதிகமாக இருக்கும் என ஐஎம்எப் கூறியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.
உலக நாடுகள் பல பணவீக்கத்தால் பாதிக்ககப்படும் என்றும், மக்களின் வாங்கும் சக்தியை இது பாதிக்கும் என்றும். அதிக கடன் வாங்கும் நிலை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications