எனது மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுகிறது.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி தனது போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு ஆபத்தில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தனது உரையைத் தொடங்கியதுமே, இந்தியாவை பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன் என்று கூறிய ராகுல் காந்தி, மோடி அரசு எதிர்க்கட்சிகள், மாநில அரசுகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லண்டனில் ராகுல்
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டன் சென்ற ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கலகத்தில், '21ஆம் நூற்றாண்டில் கவனிக்க கற்றுக்கொள்வது' என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, பாஜக அரசு ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பெசாசஸ் மென்பொருள் மூலம் தனது போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
ராகுல் காந்தி பேசுகையில், "இந்தியாவின் ஜனநாயகம் தற்போது பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். நான் இந்தியாவின் ஒரு எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர். ஒரு ஜனநாயக கட்டமைப்பிற்கு தேவையான அடிப்படைகளான நாடாளுமன்றம், சுதந்திரமான ஊடகங்கள், நீதித்துறை என அனைத்தும் எங்கள் நாட்டில் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாங்கள் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிறது. அந்த கூட்டமைப்புக்கு இடையே உரையாடல்கள் அவசியமாக இருக்கின்றன. ஆனால், அது தற்போது தாக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது." என்றார்.

பேசினால் கைது
மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் போராடும் போட்டோவை காட்டிய ராகுல் காந்தி, "நீங்கள் பார்க்கும் இந்த படம், இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அங்கு நின்று சில பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். இதுபோல பல முறை நடந்திருக்கின்றது. சொல்லப்போனால் இதுவும் ஒரு வன்முறையே. அதேபோல, ஊடகங்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதிலிருந்து நீங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியும்.

பெகாசஸ் உளவு
எனது செல்போனிலும் பெகாஸஸ் இருந்தது. பெரும்பாலான அரசியல்வாதிகளின் செல்போன்களில் பெகாசஸ் மென்பொருள் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு உளவுத்துறை அதிகாரி என்னை அழைத்து, "தயவுசெய்து போனில் பேசும்போது கவனமாக இருங்கள். நாங்கள் உங்கள் உரையாடல்களை பதிவு செய்கிறோம்" என்றார். இதுதான் நாங்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அழுத்தம். எந்த வகையிலும் குற்றவியல் வழக்குகளாக ஆகமுடியாத விஷயங்களுக்காக என்மீது சில குற்றவியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவைகளைத் தான் நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்" என்றார்.

ஒரு நல்ல விஷயம் கூட
தொடர்ந்து, பாஜக அரசு பற்றி சில நல்ல விஷயங்களை குறிப்பிடும்படி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "உங்களுக்கு சிலவற்றின் அடிப்படைகள் மீதே நம்பிக்கை இல்லாத போது எப்படி பாராட்ட முடியும்? நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டை பாழாக்குகிறார் என்றால் அவர் செய்யும் ஒரு சில நல்ல விஷயங்கள் எனக்கு எப்படி பெரிதாகத் தெரியும்? அவர் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications