தொப்புன்னு சோபாவில் விழுந்த "அழுக்கு சாக்ஸ்".. மலாலா வீட்டில் பஞ்சாயத்து போல.. ஆஹா.. மாலிக் பண்ண வேலை

மலாலா வீட்டில் கணவன் மனைவி தகராறு வெடிக்கவும் ட்விட்டர்வாசிகள் கமெண்ட்களை சொல்லி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மலாலா வீட்டில் நடக்கும் குடும்ப சண்டையை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு போய்விட்டனர்.. இது தொடர்பான ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மலாலா - ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்... தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானவர். 15 வயது சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர்.

கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயிர்தப்பியிருந்தார் மலாலா. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார்..

அக்ரிமெண்ட்

அக்ரிமெண்ட்

இதற்காக நோபல் பரிசையும் வென்றுள்ளார் மலாலா.. இதன்மூலம் உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் மலாலா. ஒருமுறை வோக் பத்திரிகைக்கு மலாலா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் திருமணம் குறித்த அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு மலாலா, "மக்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்? இது எனக்கு இதுவரைக்கும் புரியவேயில்லை.. 2 பேர் இணைந்து வாழ்வதற்கு இப்படியெல்லாம் கல்யாணம் அவசியமா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபருடன் வாழ விரும்புகிறீர்கள் தானே? அப்படியிருக்கும்போது, ஏன் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்து கொள்கிறீர்கள்? அவ்வாறு இல்லாது நீங்கள் ஏன் துணையாளராக வாழ்க்கையை தொடரக் கூடாது" என்று கூறியிருந்தார்.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

மலாலாவின் இந்த பதிலை கேட்டு பாகிஸ்தான் ஊடகங்கள் ரியாக்ட் செய்திருந்தன.. திருமணத்துக்கு எதிராகப் பேசிவிட்டார் என்றும் விமர்சித்திருந்தன.. ஆனால், கடந்த 2021-ல்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளரான மாலிக் அஸ்ஸரை, திடீரென மலாலா திருமணம் செய்து கொண்டார்.. இப்போது விஷயம் என்னவென்றால், எல்லார் வீட்டிலும் நடக்கக்கூடிய பஞ்சாயத்து, மலாலா வீட்டிலும் வெடித்துள்ளது.. ஆம்.. புருஷன் - பொண்டாட்டி சண்டை ஆரம்பமாகி விட்டது.

சாக்ஸ் அழுக்கு

சாக்ஸ் அழுக்கு

இதுதொடர்பாக மலாலா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில், "சோபாவில் சாக்ஸ் கிடந்தது... இதை நான் பார்த்ததுமே அஸ்ஸர் கிட்ட கேட்டேன். இது உங்களுடையதா? என்று கேட்டேன்.. அதற்கு அவர், "ஆமா.. அழுக்கா இருக்கு.. தூக்கி வெளியில் போடணும் என்றார்.. உடனே நான் அதை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுட்டேன்" என்று மலாலா பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டை மலாலாவின் கணவர் பார்த்துவிட்டார்.. உடனே அந்த ட்வீட்டில் வந்து பதில் ட்வீட்டை பதிவிட்டு, ஒரு கருத்துக்கணிப்பையும் அதில், நடத்தியிருந்தார்..

குட்டி போல்

குட்டி போல்

"சாக்ஸ் அழுக்காக இருந்தால் என்ன செய்யணும்?" என்று கேள்வி கேட்டு, வெளியில் தூக்கி எறிய வேண்டும்.. அல்லது குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற இரண்டு ஆப்ஷன்களை தந்திருந்தார். இதை பார்த்த ட்விட்டர்வாசிகள், குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும் என்ற ஆப்ஷனுக்கு திரண்டு வந்து வாக்குகளை தந்தனர்.. இதில் ஸ்பெஷல் என்னவென்றால், கணவனும் - மனைவியும் பதிவிட்ட ட்வீட்களைவிட, ட்விட்டர்வாசிகளின் கமெண்ட்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. வெல்கம் வெல்கம் டு திருமண வாழ்க்கை என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்..

புலம்பல்கள்

புலம்பல்கள்

அதேபோல இன்னொருத்தரோ, "2 பேரும்தானே அந்த வீட்டில் இருக்கீங்க.. வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது கணவன், மனைவி 2 பேருக்குமே உண்டு, அதனால், அஸ்ஸார் கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும்" என்று அட்வைஸ் தந்துள்ளார்.. ஆனால் பெரும்பாலான பெண்கள், தங்கள் வீட்டு சமாச்சாரத்தை மலாலாவிடம் பதிவிட்டு புலம்பிவிட்டனர்.. "எங்க வீட்லயும் இப்படிதான் மலாலா.. நானும் பலமுறை என் கணவரிடம் சொல்லிட்டேன்.. பொருட்களை உரிய இடத்தில் வைப்பதே கிடையாது.. என்ன பண்றதுன்னே தெரியல" என்று பெண்கள் புலம்பி வருகிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+