கிம் ஜாங் உன் உடம்பு தேற வேண்டிக்கோங்க மக்களே.. சகோதரி மட்டும் ஆட்சிக்கு வந்தால்.. கதை கந்தல்தான்
லண்டன்: வட கொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங்-உன் உடல்நிலை மோசமாகி வரும் நிலையில், அவரின் சகோதரி கிம் யோ-ஜாங் , அதிகாரத்தைக் கைப்பற்ற காத்திருக்கிறார்.
Recommended Video
கிம் யோ-ஜாங் தனது சகோதரர்அவரது எட்டு ஆண்டுகால ஆட்சியில் இருந்ததை விட, இரக்கமற்றவராக இருக்கக்கூடும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கிம் ஜாங் உன், உடல்நிலைக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. பல்வேறு வதந்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காமல் இருப்பது சந்தேகங்களை அதிகரிக்கிறது. இந்த நிலையில், கிம் யோ ஜாங் பதவியை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இரக்கம் இல்லை
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தம்மை எதிர்ப்பவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை. உறவினர்களாக இருந்தாலும் கடுமையாகவே நடந்து கொள்வார். அவரைவிட அவரது சகோதரி கிம் யோ ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆயுத பிரியை
புதிய வகை ஆயுதங்கள் வாங்கி குவிப்பதில் அதிக மோகம் கொண்டவராம் கிம் யோ. வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை நீண்ட நாட்களாக தயார்படுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் என்று கூறி, வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள் எனவும் சர்வாதிகார ஆட்சிகள் பற்றிய நிபுணரான பேராசிரியர் நடாஷா லிண்ட்ஸ்டெய்ட் தெரிவிக்கிறார்.

குடும்ப சாம்ராஜ்யம்
அப்படி, கிம் தங்கை ஆட்சியை கைப்பற்றினால், 1948ல் கிம் இல்-சங் தொடங்கிய குடும்ப சாம்ராஜ்யம், இடைவெளி இல்லாமல் தொடரும் என்று நம்பலாம். பேராசிரியர் லிண்ட்ஸ்டெய்ட் நடாஷா மேலும் கூறுகையில், பெண்ணாக இருப்பதால் அவர் தலைவராக பொறுப்பேற்பது வட கொரியாவை பலவீனப்படுத்தும் என்று நான் நம்பவில்லை.

கடவுளைப் போல
வட கொரியா மக்கள் ஆட்சியாளர்களை மனிதர்களைப் போல பார்ப்பதில்லை. கிம் ஜாங்-உன்னை எப்படி கடவுளாக பார்த்தனரோ அப்படியே அவர் தங்கையையும் பார்ப்பார்கள். அவளும் கடவுள் போன்றவர் ஆகிவிடுவார். அவருடைய ஒவ்வொரு செயலும் புனிதப்படுத்தப்படும். கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்கொண்டதை விட கிம் யோ கடுமையாகவே நடத்த வாய்ப்பிருக்கிறது, அவரது தாத்தாவைவிடவும் அது கடுமையாக இருக்க கூடும், என்றும் நடாஷா தெரிவிக்கிறார்.

சுவிஸ் படிப்பு
கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாகவே தமது சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார். தமது 9வது வயதில் இருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற கிம் யோ, பல்கலைக்கழக படிப்பை வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணி போட்டிக்கு வரமாட்டார்
கிம் யோவுக்கு ஒரே போட்டியாளர் கிம் ஜாங்கின் மனைவி ரி சோல் ஜூ. ஆனால், கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் இறங்கமாட்டார் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் கிம் யோவின் அரசாங்க தொடர்புகளும், இரக்கமற்ற குணமும் அண்ணியார் ரி சோல் ஜூவுக்கு தெரியும். எனவே நாத்தனாரை எதிர்க்க அவர் அச்சப்படுவார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications