‘‘நான் இனி இந்தியர் கிடையாது’’.. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடி!
லண்டன்: ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடி கைது நடவடிக்கைக்கு பயந்து கடந்த 2010ம் ஆண்டில் லண்டனுக்கு தப்பியோடினார். அங்கேயே வசித்து வந்த லலித் மோடி தற்போது பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றுள்ளார். இதனால் மோசடி வழக்கில் இனி அவரை கைது செய்வதில் கூடுதல் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் லலித் மோடி. ஐபிஎல் நிறுவனர், தலைவராக செயல்பட்டார். 2008, 2009, 2010 என 3 ஆண்டுகள் லலித் மோடி தலைமையில் தான் ஐபிஎல் போட்டிகள் நடந்தன.
இந்த சமயத்தில் தான் அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன.

ஐபிஎல் தொடரில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு ரூ.470 கோடி வரை மோசடி செய்ததாகபிசிசிஐ சாரபி்ல சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி 2009ல் லோக்சபா தேர்தலை காரணம் காட்டி தென்ஆப்பிரிக்காவில் ஐபிஎல் தொடரை நடத்தினார்.அப்போது ரிசர்வ் வங்கியின் அ்னுமதியின்றி வெளிநாட்டிற்கு அந்நிய செலாவணி பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லலித் மோடி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்த லலித் மோடி பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று தலைமறைவானார். கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் சுற்றத்திரிந்த லலித் மோடி கடைசியாக லண்டனிலேயே நீண்டகாலமாக வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் கைக்கொடுக்கவில்லை.
🇬🇧 A PROUD MOMENT. A NEW CHAPTER.Today, 14 November 2026, I had the honour of addressing the Oxford Union, where I publicly shared a very special and personal milestone.I AM PROUD TO BE A BRITISH CITIZEN. 🇬🇧On 15 September 2026, surrounded by family and friends, I celebrated my British citizenship at a ceremony that will always hold a special place in my heart.The United Kingdom has been my home for many years. It is a country I have come to admire and appreciate deeply — its people, institutions, traditions and values.Becoming British is a privilege and a responsibility that I embrace with pride, gratitude and a genuine sense of belonging.My life’s journey has been shaped by different cultures and experiences, and I look forward to continuing to contribute positively to the country I proudly call home.Thank you to my family, friends and everyone who has been part of this journey, and to the Oxford Union for providing such a memorable occasion to share this news.A new chapter, with much to look forward to.And on His Majesty King Charles III’s birthday, a particularly special day to share this moment.God Save the King! 🇬🇧👑Lalit ModiFounder IPL#BritishCitizen #OxfordUnion #UnitedKingdom #GodSaveTheKing
— Lalit Kumar Modi (@LalitKModi) November 14, 2026
இந்நிலையில் தான் லலித் மோடி பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றுள்ளார். இதுதொடர்பாக லலித் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''இது பெருமையான தருணம். இது புதிய அத்தியாயம். இன்று நவம்பர் 14 (அதாவது நேற்று) ஆக்ஸ்ஃபோர்ட் யூனியனில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.அங்கு நான் எனது சிறப்பான மற்றும் தனிப்பட்ட சாதனையான ஒன்றை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டேன். நான் பெருமையான பிரிட்டிஷ் குடிமகன் என்பதை சொன்னேன்.
ஆம் 2026 செப்டம்பர் 15ம் தேதி எனதுகுடும்பத்தினர்,நண்பர்கள் சூழ நான் எனதுபிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதை கொண்டாடினேன். அது என்னுடைய இதயத்தில்எப்போதும் சிறப்பானதாக இருக்கும். யுனைடெட் கிங்டம் என்பத எனக்கு நீண்ட ஆண்டுகளாக என்னுடைய இல்லமாக உள்ளது.
இங்கிருக்கும் மக்கள், நிறுவனங்கள்,கலாசாரம், கொள்கைகள் என அனைத்தின் மீதும் நான் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளேன். அதனை பாராட்டவும் செய்கிறேன்.பிரிட்டிஷ் குடிமகனான மாறியதை நான் பெரும் பாக்கியமாகவும்,பொறுப்பாகவும் கருதுகிறேன். இதனை நான் பெருமையுடனும், நன்றியுணர்வுடனும் ஏற்று கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
தற்போது பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றுள்ள லலித் மோடி இந்தியாவின் குடியுரிமையை ஏற்கனவே துறந்தார். கைது நடவடிக்கைக்கு பயந்த அவர் தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான வனுவாட்டுவின் 'முதலீடு மூலம் குடியுரிமை' திட்டத்தின் கீழ் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பெற்றார். அங்கு குடியுரிமை பெற்றவுடன் லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை தூதரகத்தில் ஒப்படைத்தார்.
ஆனால் பிரதமர் மோடியின் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 2025ம் ஆண்டில் வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாட் லலித் மோடியின் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதனால் லலித் மோடி நாடற்ற நபராக இருப்பதாகவும் ஒரு தரப்பினரும், அதேவேளையில் லலித் மோடியோ தனது வனுவாட்டு குடியுரிமை இன்னும் கூட ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறி வந்தார். இதனால் அவர் எந்த குடியுரிமையில் இருக்கிறார் என்பது சர்ச்சையாகவே தொடர்ந்தது.
ஆனால் தற்போது லலித் மோடி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளார். இந்திய குடியுரிமையில் இருந்தபோதே அவரை நாடு கடத்துவதில் சவால் இருந்தது. தற்போது அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதால் இனி கூடுதல் சவாலை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதால் லலித் மோடி இந்திய குடியுரிமையை துறந்துள்ளது மீண்டும் அம்பலமாகி உள்ளது.




Click it and Unblock the Notifications
