ஸ்காட்லாந்தில் மனிதர்களே இல்லாத அழகிய தீவு.. வெறும் 1.5 கோடி தான்.. அப்படி என்ன ஸ்பெசல் அங்கு?
லண்டன்: ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பார்லோக்கோ என்ற அழகிய தீவு வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை வாங்க ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த தீவின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள பார்லோக்கோ தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவு பல உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்ந்து வருகிறது.
இங்கு இதுவரை ஒரு கட்டடம் கூட கட்டப்படவில்லை... இந்த ஆள்நடமாட்டம் இல்லாத அழகிய குட்டித் தீவு ஒன்றரை கோடிக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்ட பலர், தீவை வாங்குவதற்கு நான் நீ என்று போட்டி போடுகிறார்கள்.

கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட உடன் பலர் கொடைக்கானல், ஊட்டி என்று மலை பிரதேசங்களுக்கு செல்கிறார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வார். மிகப்பெரிய செல்வந்தர்கள். தங்களுக்கு சொந்தமான மலை எஸ்டேட்களுக்கோ, தீவுகளுக்கோ செல்வார்கள்.
பெரும் பணக்காரர்களுக்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகள் அல்லது கடற்கரையுடன் தனித்தீவுகளை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். மலை எஸ்டேட்டுகளை விட தீவுகள் வாங்குவது பல பெரும் பணக்காரர்களுக்கு பிடித்தமான விஷயமாக உள்ளது.
ஏனெனில் தீவில் உல்லாசமாக பிடித்தவாறு இருக்கலாம். இயற்கையை ரசிக்கலாம். கடற்கரையில் பிடித்த விஷயங்களை செய்து ஜாலியாக இருக்கலாம். அப்படிப்பட்ட தீவுகள் உலகில் நிறைய இடங்களில் உள்ளன.
ஸ்காட்லாந்தில் ஒரு தீவையே சொந்தமாக்கலாம் என்றும் அதுவும் நீங்கள் நம்ப முடியாத விலையில் கிடைக்கும் என்றும் ஒரு அறிவிப்பு சில நாள் முன்பு வெளியானது. அதாவது ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள தொலைதூர மற்றும் மக்கள் வசிக்காத தீவான பார்லோக்கோ விற்பனைக்கு உள்ளதாகவும், இதன் விலை $1,90,000 அதாவது சுமார் 1.5 கோடி ரூபாய் மட்டுமே என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பார்லோக்கோ தீவு பல உயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இந்த தீவில் ஒரு பெரிய குளம் உள்ளதாம். இது குளிர்கால மாதங்களில் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு நீரின் ஆதாரமாக இருக்கிறதாம். மேலும் அந்த தீவில் குறைந்த ஆழமே கொண்ட ஒரு கூழாங்கல் கடற்கரை உள்ளதாம். இந்த தீவில் வீடுகளோ கட்டிடங்களோ இல்லை.
இந்த தீவு ஸ்காட்லாந்தில் உள்ள டம்ஃப்ரைஸ் மற்றும் காலோவே கவுண்டியில் இருக்கிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ள கேட்ஹவுஸ் ஆஃப் ஃப்ளீட் என்ற பகுதியில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இரயில் நிலையத்தை அடைய கரையை கடந்த பின்னர் சாலை வழியாக ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications