பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸை நியமித்த ராணி எலிசபெத்! லண்டனுக்கு பதில் ஸ்காட்லாந்தில் நடந்த நிகழ்வு
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை பிரிட்டன் ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமித்தார்.
கடந்த 2019 பிரிட்டன் பிரதமராக இருந்து வந்தவர் போரிஸ் ஜான்சன். பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் இவர்.
இதனால் தொடக்கத்தில் இவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாகவே இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்கினார்.

போரிஸ் ஜான்சன்
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடே திணறிய நிலையில், இவர் மட்டும் தனது ஊழியர்களுக்கு மது பார்டி கொடுத்தார். இதனால் அதிருப்தி தொடர்ந்து அதிகரித்தது. சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவரை முக்கிய பதவியில் நியமித்தது பெரிய சர்ச்சையானது. இதனால் கட்சிக்குள்ளேயே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பிரதமர் பதவியை சில வாரங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

தேர்தல்
இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டின் சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே நாட்டின் பிரதமராக இருப்பார் என்பதால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ரிஷி சுனக்கிற்கு ஆரம்பத்தில் நல்ல ஆதரவு கிடைத்தாலும் அது விரைவில் சரிந்தது.

லிஸ் டிரஸ்
அதேநேரம் லிஸ் டிரஸுக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இறுதியில் நடந்த தேர்தலில் லிஸ் டிரஸ் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்ற நிலையில், லிஸ் டிரஸ் 81,326 வாக்குகளைப் பெற்று அவரை வீழ்த்தினார். அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நியமனம்
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை பிரிட்டன் ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமித்தார். ஸ்காட்லாந்தில் பிரிட்டன் ராணி எலிசபெத்தை சந்தித்து லிஸ் டிரஸ் வாழ்த்து பெற்றார். இதையடுத்து புதிய அமைச்சரவையை அமைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். பொதுவாக இந்த நிகழ்வு லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் தான் நடைபெறும். இருப்பினும் 96 வயதாகும் ராணி எலிசபெத்தின் உடல்நிலை காரணமாக அவரால் இப்போது லண்டன் வர முடியவில்லை. இதன் காரணமாகவே ஸ்காட்லாந்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications